நாகப்பட்டினம், பிப். 29-
காலிப் பணியிடங்களை நிரப்பிடவும், புதிய பென் ஷன் திட்டத்தைக் கைவிட வும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திடவும், பொது விநியோகத் திட் டத்தை பலப்படுத்தவும், பொதுத்துறை நிறுவனங் களைப் பாதுகாத்திடவும் மற்றும் பல கோரிக்கை களையும் வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் பங்கேற்ற அகில இந்தியப் பொது வேலைநிறுத்தத்தை முன் னிட்டு நாகை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காலை அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் போராட்ட ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் எம்.ஹரிகிருஷ் ணன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ப.அந் துவன் சேரல் விளக்கவுரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழ கன் சிறப்புரையாற்றினார். பல்வேறு தோழமைச் சங்கங்களின் சார்பில் எஸ். அசோக் குமார், எம்.ஆர். சுப்பிரமணியன், எம்.காந்தி, எஸ்.ஜோதிமணி, எஸ். கணேசன், கணபதி, என். பாபுராஜ், வி.சுந்தரவடி வேல், எம்.ஜெயராஜ் உள் ளிட்ட பலர் போராட் டத்தை விளக்கிப் பேசினர். அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்.சிவக்குமார் நிறைவுரை யாற்றினார். வட்டத் துணைத் தலை வர் எஸ். மூர்த்தி நன்றி கூறி னார்.

Leave a Reply

You must be logged in to post a comment.