முசிறி, பிப்.29-
முசிறி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ -மாணவிகளின் ஒரு வார கால சிறப்பு முகாம் நிறைவு விழா அயித் தாம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கணிதவியல் துறை தலைவர் மருதன், வணிகவியல் துறை தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஈஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். முசிறி காவல் துறை கண்காணிப்பாளர் தங்கவேலு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.அயித்தாம்பட்டி கிராமத்தில் ஒருவார காலமாக கோவில் உழவாரப்பணி, பொது இடங்களை தூய்மை செய்தல், விழிப்புணர்வு பேரணி, மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ – மாணவிகள் ஈடுபட் டனர். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப் பாளர் மருதன் உள்ளிட்ட பலர் மாணவர்களை வாழ்த்திப் பேசினர். விழாவில் பகுதி பிரமுகர்களும், கல்லூரி பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தமிழ்மணி நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: