முசிறி, பிப். 29-
முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யில் செவ்வாயன்று திருச்சி வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மாவட்ட வேலை வாய்ப்பு அலு வலகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக் கான பயிற்றுவிப்பு வழிகாட்டு மையம், முசிறி அறி ஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இணைந்து தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீமுரளிதரன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். சென்னை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை துணை இயக்குநர் நடராஜன், திருச்சி வேலை வாய்ப்பு மண்டல துணை இயக்குநர் முரளிதரன், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன், திருச்சி முன்னோடி வங்கி மேலாளர் ராமதாஸ், திருச்சி மாவட்ட தொழில் மைய மேலாளர் கந்த சாமி, சிறு மற்றும் குறு தொழிலதிபர்கள் சங்க துணைத்தலைவர் கனகசபாபதி, கல்லூரி பேராசிரி யர்கள் மருதன், கருணாநிதி ஆகியோர் கருத்து ரையாற்றினர். ஒன்றியக்குழு தலைவர்கள் முசிறி சரஸ்வதி, தா.பேட்டை செல்வராஜ், முசிறி பேரூராட்சி தலை வர் மாணிக்கம், எம்.புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகஜோதி, ஒன்றியக் குழு உறுப்பினர் ஹேமலதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவிச்சந்திரன், வார்டு உறுப்பினர் சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லூரியின் ஆங்கில துறை தலைவர் முருகராஜ்பாண்டியன் நன்றி கூறினார்.
நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா
முசிறி, பிப்.29-முசிறி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ -மாணவிகளின் ஒரு வார கால சிறப்பு முகாம் நிறைவு விழா அயித் தாம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கணிதவியல் துறை தலைவர் மருதன், வணிகவியல் துறை தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஈஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். முசிறி காவல் துறை கண்காணிப்பாளர் தங்கவேலு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.அயித்தாம்பட்டி கிராமத்தில் ஒருவார காலமாக கோவில் உழவாரப்பணி, பொது இடங்களை தூய்மை செய்தல், விழிப்புணர்வு பேரணி, மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ – மாணவிகள் ஈடுபட் டனர். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப் பாளர் மருதன் உள்ளிட்ட பலர் மாணவர்களை வாழ்த்திப் பேசினர். விழாவில் பகுதி பிரமுகர்களும், கல்லூரி பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தமிழ்மணி நன்றி கூறினார்
நடக்க இருப்பவை
மரப்பாச்சி வழங்கும் ‘ஆண்மையோ ஆண்மை’ (அரசியல் அங்கத நாடகம்). வெள்ளிக்கிழமை (மார்ச் 2) மாலை 6.30 மணி. இடம்: ஸ்பேசிஸ், எண். 1 எலியட்ஸ் பீச் சாலை, பெசன்ட் நகர், சென்னை. அனுமதி இலவசம்

Leave A Reply

%d bloggers like this: