திருநெல்வேலி, பிப்.29 – சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்துகுமார் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்களிடம் வாழ்த்துப் பெற்றார்.சங்கரன்கோவில் இடைத் தேர்தல் மார்ச் மாதம் 18 ம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர் தலில் அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக, சமாஜ்வாதி, பாஜக ,ஆகிய கட்சிகள் போட்டியிடு கின்றன. தேமுதிககட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இந் நிலையில் தேமுதிக வேட்பாளர் முத்துகுமார் தேமுதிக கட்சி செயலாளர்கள் முகமது அலி, அய்யம்பெருமாள், மீனாட்சி சுந்தரம், கர்னல் தேவதாஸ், ஆனந்தமணி, ஜெயச்சந்திரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சங்கரன் கோவில் தாலுகா செயலாளர் முத்துபாண்டி,நகர செயலாளர் திருவுடையான், மற்றும் சிபி எம் நிர்வாகிகள் புடை சூழ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட குழு அலுவலகத் திற்கு வந்தார். கட்சியின் மூத்த தலைவரும், மாநிலக்குழு உறுப் பினருமான வீ.பழனி மற்றும் மாவட்டக் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன் ஆகியோர் வேட்பா ளருக்கு பொன்னாடை அணி வித்து ஆதரவையும் வாழ்த்துக் களையும் தெரிவித்தனர். தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடை பெற்றது .முன்னதாக சங்கரன் கோவி லில் மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் முத்து பாண்டி மற்றும் நகர செய லாளர் திருவுடையானையும் கட்சி நிர்வாகிகளையும் வேட் பாளர் முத்துகுமார் சந்தித்து ஆதரவு கேட்டு வாழ்த்துப் பெற்றார். தொடர்ந்து வேட் பாளர் முத்துகுமார் சங்கரன் கோவில் தொகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

Leave A Reply

%d bloggers like this: