தில்லி அருகில் வாசிர்பூர் என்ற ஒரு பகுதி. இரும்புப் பாளங்களை எஃகு இரும்பாக மாற்றுகிற தொழிற்சாலைகள் இங்கே உள் ளன. கடந்த பத்து ஆண்டுகளாக இவற்றின் தொழிலாளர்களுக்கு வார விடுமுறை, பண் டிகை விடுமுறை, பொது விடுமுறை எதுவுமே கிடையாது. அதற்கு முன் வரையில் விடு முறை அளிக்கப்பட்டு வந்தது. புதிய தொழிற் சாலைகள் வந்ததைத் தொடர்ந்து, பிழைப்புக் காக நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து எவ் வளவு கொடுமையையும் தாங்கிக்கொள்ளத் தயாராக ஏழைத் தொழிலாளர்கள் தலைநக ருக்கு இடம்பெயர்ந்ததைப் பயன்படுத்திக் கொண்டு விடுமுறையை ஒழித்துக்கட்டினார் கள் முதலாளிகள். 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக்கினார்கள். மருத்துவ உத வியோ, பாதுகாப்புக் கவசமோ எதுவுமே இல்லை.
ஆகவே கடுமையான உடல்நலச் சீர்கேடு, தொடர்ந்து உழைக்க முடியாவிட் டால் கட்டாய வெளியேற்றம் என கொடுமை களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். வேத னையை மறக்க அவர்களில் பலருக்குக் கிடைத்த ஒரே வழி மதுக்கடைகள்தான். பெரும்பாலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான், பிற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள்தான் என்பதால் தொழிற்சங்கப் பதாகையின் கீழ் இவர்கள் திரள்வதை முத லாளிகள் எளிதாகத் தடுத்து வந்திருக்கிறார் கள்.பொறுத்தது போதும் என, கடந்த ஆண்டு பிப்ரவரியில் கோரிக்கைகளை முன்வைத்தார் கள் தொழிலாளர்கள். முதலாளிகள் அசைந்து கொடுக்கவில்லை. அரசாங்கம் இவர்கள் பிரச்சனையில் தலையிட முன்வரவில்லை. கோரிக்கைகளை எழுப்புவதில் முன்நின்ற தொழிலாளர் தலைவர்கள் பழிவாங்கப்பட்டார் கள்.ஆயினும், இந்த ஆண்டு பிப்ரவரியில் தொழிலாளர்கள் துணிந்தார்கள். 15ம் தேதி தொழிலாளர்கள் சுமார் 1,100 பேர் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தார்கள். மறுநாள் வேலைக்குச் சென்றபோது அவர்களை உள்ளே வரக்கூடாது என்று தடுத்தார்கள் முத லாளிகளின் அடியாட்கள். இதைவிடவும் மோசமான நிலையில் வேலை செய்ய புதிய அப்பாவிகள் கிடைப்பார்கள் என்ற தைரியம் முதலாளிகளுக்கு.ஆனால், தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தார்கள்.
இவர்க ளுக்கு ஆதரவாக மற்ற தொழிற்சாலைகளின் தொழிலாளர்களும் களம் இறங்கினார்கள். மதம், இனம், சாதி, மொழி, கட்சி வேறுபாடுகள் கடந்து ஒன்றுபட்டவர்களாகத் தோள் சேர்ந்து நின்றார்கள்.24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருந்த எந்திரங்களின் பற்சக்கரங்கள் சுழல்வது நின்றுபோனது. இந்தத் தொழிற்சாலைகளி லிருந்து வருகிற எஃகு இரும்பை வைத்துத் தான் மற்ற தொழிற்சாலைகளில் பாத்திரங்கள், மின்சாதனங்கள் உள்ளிட்ட பல பொருள்கள் தயாராக வேண்டும். அந்த நிறுவனங்களின் முதலாளிகள் தங்களது உற்பத்தியும் முடங்கிய தைப் பார்த்து, இரும்புத் தொழிற்சாலைகளின் முதலாளிகளை நிர்ப்பந்திக்கத் தொடங்கினார் கள்.துருப்பிடித்த இரும்பு மனத்தோடு இருந்த இரும்புத் தொழிற்சாலை முதலாளிகள் பிப்ர வரி 24 அன்று இறங்கிவந்தார்கள். தொழி லாளர்களின் வார விடுமுறை கோரிக்கை ஏற்கப்பட்டது. தொழிலாளர் அரசு ஈட்டுறுதி (இஎஸ்ஐ) மருத்துவ சேவைக்கான அடை யாள அட்டைகள் வழங்கவும் ஒப்புக்கொள்ளப் பட்டது.
இதன்மூலம் தொழிலாளர்கள் முறைப்படி பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உருவானது. பாதுகாப்புக் கவசம் உள்ளிட்ட மற்ற கோரிக்கைகள் குறித்து தங் களது சங்கத்தின் தேர்தல் முடிந்தபிறகு பேசி முடிவு செய்யவும் முதலாளிகள் முன்வந்தனர்.வெற்றிப் பெருமிதத்துடன் பணிக்குச் செல்லத் தொடங்கிய தொழிலாளர்கள் மீண் டும் வேலைநிறுத்தம் செய்தார்கள்… பிப்ரவரி 28 அன்று. ஆம், தங்களுடைய வெற்றியோடு ஒதுங்கிவிடாமல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங் களைப் பாதுகாத்தல், இந்தியத் தொழிலாளர் சட்டங்களை அந்நிய நிறுவனங்களுக்குத் தோதாக வளைப்பதைக் கைவிடுதல் போன்ற மக்கள் நலனுக்கான கோரிக்கைகளுக்காக நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் இவர்களும் பங்கேற்றார் கள் கம்பீரமாக.பிரித்துவைக்கும் வரப்புகளைத் தாண்டி உழைக்கும் வர்க்கமாக ஒன்று பட்டுப் போரா டிய வெற்றிக் கதை இது. இந்தத் தொழி லாளர்களுக்கும், நம்பிக்கையற்றிருந்தவர்கள் போராட்ட உணர்வு மிக்கவர்களாக அணி திரளக் காரணமானவர்களுக்கும் ஒரு செவ் வணக்கம்.
(தகவல் ஆதாரம்: தி ஹிண்டு, 29.2.2012)

Leave A Reply

%d bloggers like this: