திருச்சிராப்பள்ளி, பிப்.29-
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் 100 சதவீத தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடு, தனியார் மயம் மற்றும் அவுட்சோர் சிங்குக்கு எதிராகவும், பெட் ரோல்,டீசல் உள்ளிட்ட அத் தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப் படுத்த வேண்டும், பொதுத் துறை பங்குகளை தனியா ருக்கு விற்கும் முயற்சிகளை கைவிட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், நிரந்தரப் பணியிடங்களில் காண்ட் ராக்ட் மயத்தை கைவிட வேண்டும், முறைசாரா தொழிலாளர் தேசிய நிதி யம் உருவாக்க வேண்டும், சில்லரை வர்த்தகத்தில் அந் நிய முதலீட்டை தடுத்து நிறுத்து வேண்டும், தொழிற் சங்க ஜனநாயக உரிமை களை பறிக்கக் கூடாது என் பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நாடு முழு வதும் செவ்வாயன்று மத்திய – மாநில அரசு ஊழி யர்கள், தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டன.திருச்சி மாவட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியுசி, பிஎம்எஸ், ஏஐ சிசிடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் சார் பில் பெல், வங்கி, இன்சூ ரன்ஸ், மின்வாரியம், அரசுப் போக்குவரத்து, அரசு விரைவு போக்குவரத்து, மத்திய பாதுகாப்புத்துறை உள் ளிட்ட பொதுத்துறை நிறு வனங்கள், சாலைபோக்கு வரத்து, சர்க்கரை மற்றும் சிமெண்ட் ஆலைகள், ஆட்டோ, சுமைப்பணி, கூட்டுறவு, ஆசிரியர், அரசு ஊழியர் அமைப்புகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.திருச்சி துப்பாக்கி தொழிற் சாலை முன்பு நடந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் சங்கத் தலை வர் எம்.சரவணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத் தில் பொதுச்செயலாளர் தியாகராஜன், ஐஎன்டியுசி தலைவர் சந்திரசேகரன், தொ.மு.ச. பொதுச் செய லாளர் கண்ணன், காமராஜ் படைக்கல சங்க தலைவர் ராஜூ ஆகியோர் ஆர்ப் பாட்டத்தை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கித் தொழிற் சாலை யில் பணியாற்றும் சுமார் 3 ஆயிரம் தொழிலாளர் களும் கலந்து கொண்டனர். திருச்சி எச்ஏபிபி தொழிற் சாலையில் நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு எச்ஏபிபி தொழிலாளர் சங்கத் தலை வர் சத்தியவாகீசன் தலை மை வகித்தார். பொதுச் செயலாளர் சண்முகசுந்த ரம், ஐஎன்டியுசி பொதுச் செயலாளர் பூபதி ஆகி யோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.