திருவாரூர், பிப்.29-
தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 11.01.2012 முதல் செயல் பட்டு வருகிறது. இத்திட்டத்தை மேலும் சிறப்பாக நடத்துவது தொடர் பாகவும் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி மேம்பாடு குறித்து ஆலோ சனைக்கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் தலைமையில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடை பெற்றது.இத்திட்டத்தின் கீழ் பய னாளிகளுக்கு புகைப்படம் மற்றும் அடையாள அட்டை கள் விநியோகம் செய்யும் பணிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாம் தளத்தில் சிறப்பு அலுவலகம் செயல் பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் தகுதி பெறும் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக நன்னிலம் வட்டத்தை சார்ந்த 27557 பயனாளிகளுக்கு அடையாள அட்டை விரைவில் வழங்கப் படஉள்ளது.இத்திட்டம் குறித்து விபரங் கள் தெரிந்து கொள்ளவும் தக வல் தெரிவிக்கவும் 73730 04964 என்ற அலைபேசி எண்ணிலும், 18004253993 என்ற கட்டணமில்லா எண் ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில் தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) பா.லலிதாவதி, கோட்டாட் சியர்கள் ந.ஸ்ரீராமன் (திருவா ரூர்), ப.செல்வராஜ் (மன்னார் குடி), மாவட்ட திட்ட அலுவலர் கே.கணேஷ் (மருத்துவக் காப் பீட்டுத் திட்டம்), சுகாதார அலு வலர்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: