திருவாரூர், பிப். 29-
கல்வியோடு உலகச் செய் திகளை மாணவ-மாணவி களுக்கு கற்றுத்தரவேண்டும் என திருவாரூரில் நடை பெற்ற மாவட்ட அளவி லான அறிவியல் கண் காட்சி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் சி.நட ராசன் பேசினார்.தமிழகத்தின் அறிவி யலாளர் சர்.சி.வி.ராமன் நினைவாக புதிய இளம் விஞ்ஞானிகளை உருவாக் கும் நோக்கில் தமிழக அரசு நடுநிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகள் கண்டு பிடிக்கும் புதிய படைப்பு களை மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சியாக நடத்தி வருகிறது. இதில் திருவாரூர் மாவட் டத்தில் 10 ஒன்றியங்களிலும் ஒன்றியத்திற்கு 5 பள்ளி களின் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, திரு வாரூர் ஆர்.சி.பாத்திமா நடு நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண் காட்சி நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று சிறந்த அரங்குகளுக்கு பரிசுகள் வழங்கினார்.அப்போது அவர் பேசும் போது, இளம் வயதில் என்ன கற்றுத்தருகிறோ மோ அதுதான் மாணவ-மாணவிகளுக்கு அடிப் படையாக அமையும். எனவே கல்வியோடு நல்ல பண்புகளை, உலகச் செய்தி களை மாணவ-மாணவி களுக்கு ஆசிரியர்கள் கற் றுத்தரவேண்டும். எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை மாண வ-மாணவிகளின் மனதில் ஆசிரியர்கள் விதைக்க வேண்டும். தெளிவான கல் வியுடன் தேர்ந்த அனுபவங் களை சொல்லித்தரவேண் டும். மாணவ -மாணவிகளும் கல்வியில் உயர்ந்து விளங்க வேண்டும் என கூறினார்.பின்னர் கண்காட்சியில் கலந்து கொண்ட 50 பள்ளி களுக்கும் சிறந்த அரங்கை அமைத்து முதலிடம் பெற்ற மன்னார்குடி வட்டம் மரக் கடை நடுநிலைப்பள்ளிக் கும், இரண்டாம் இடம் பெற்ற முத்துப்பேட்டை கோவிலூர் நடுநிலைப் பள்ளிக்கும், மூன்றாம் இடம் பெற்ற ஆர்.சி.பாத் திமா பள்ளிக்கும் பரிசுகள் வழங்கினார்.இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.ஜீவ கனி, நகர்மன்றத்தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றியக் குழுத்தலைவர் மலர் மணி கண்டன், மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் சுப் பிரமணியன், தொடக்க கல்வி அலுவலர் சி.வைத்தி யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: