புதுதில்லி, பிப்.29- தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை அமைப்பதற் கான இடர்பாடுகளுக்கு முடிவு கட்டுவதற்காக அனைத்து மாநில தலை மைச் செயலர்கள் மற்றும் காவல்துறைத் தலைவர்க ளின் கூட்டத்தைக் கூட்ட மத்திய உள்துறை அமைச் சகம் முடிவு செய்துள்ளது. இக்கூட்டம் மார்ச் 9ம் தேதியன்று நடைபெறும். இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து மாநில தலைமைச் செயலர் கள் மற்றும் காவல்துறைத் தலைவர்களுக்கும் மத்திய உள்துறை செயலர் ஆர்.கே. சிங் அழைப்பு விடுத்துள் ளார். தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் செயல் பாடுகள் மற்றும் வாய்ப் புகள் குறித்து அனைத்து மாநில உள்துறை ஆணை யாளர்கள் அல்லது செய லர்களுடன் விரிவாக விவாதிக்கப்படும்.மாநில அரசுகளின் உரி மையில் மத்திய அரசு குறுக் கிடுவதாக பெருவாரியான முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இக்கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள் ளது. இச்சந்திப்பிற்குப் பின்னரே தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் பிற செயல்கள் தொடர்வது தீர்மானிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச் சர் ப. சிதம்பரம் மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள் ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.