கோவை, பிப். 29-
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அநீதிக ளுக்கு எதிராக தகவல் களை பெறுபவர் கோவை பாப்பம்பட்டியைச் சேர் ந்த மனோகரன். இவர் மீது அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் கொலை வெறி தாக்குதல் தொடுத்த னர். கோவை அரசு மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலை வர்கள் யு.கே.சிவஞானம், கோவை ரவிக்குமார், கணேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித் தனர்.கோவை மாவட்டம் சூலூர் தாலுக்கா பாப்பம் பட்டி அருந்ததியர் கால னியைச் சேர்ந்தவர் சின் னான். இவரது மகன் மனோ கரன் (39) கட்டிட தொழி லாளி. இவர் தகவல் அறி யும் உரிமைச் சட்டத்தின் மூலம் பாப்பம்பட்டி தலித் மக்களுக்கு 1976 முதல் தற் போது வரை வழங்கிய இல வச பட்டா விபரங்களை யும், வீட்டுமனைகள் நிலம் ஒப்படைப்பு, ரத்து செய் யும் அதிகாரம் பஞ்சாயத்து தலைவருக்கு உள்ளதா? அல்லது வருவாய் துறையி னருக்கு உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு விப ரங்களை சேகரிக்கப்பதும், ரேசன் கடையில் விநியோ கிக்கும் பொருட் களின் அளவு மற்றும் தரம் குறித்து கேட்டு போராடு பவர். இதேபோல் அப்ப குதியில் செயல்படும் டாஸ் மாக் கடையில் பார் நடத்தி வரும் ஸ்ரீதர் என்ப வர் அரசு விடுமுறை நாட் களில் அனுமதியின்றி கூடு தல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்துள்ளார். இவ்வாறு முறைகேடாகச் செய்யக்கூடாது என மனோரகன் தெரிவித்துள் ளார். ஆனால் இதனைக் கண்டுகொள்ளாமல் மீண் டும் கூடுதல் விலைக்கு மது பானம் விற்பனை செய்ய பட்டுள்ளது. இதனால் ஆவே சமடைந்த மனோகரன் அவர்களை எச்சரித்துள்ளார். இந்நிலையில் பாப்ப ம்பட்டி நடுநிலைப்பள்ளி யில் சிகரம் பவுன்டேசன் ஆண்டு விழா ஞாயிறு அன்று நடைபெற்றது. இவ்விழாவில் மனோகர னின் மூத்த மகள் பவித்ரா கலந்துகொண்டார். இரவு 7 மணியளவில் மகளை அழைத்துவர பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார்.அப்போது டாஸ்மாக் பார் உரிமையாளர் ஸ்ரீதர், குணசேகரன், சம்பத், குழந் தைவேலு ஆகியோர் மனோகரனை சாதியைச் இழிவாக சொல்லி, கடுமை யாக கொலைவெறி தாக்கு தலில் ஈடுபட்டனர். இதில் வயிற்றில் தொடர்ந்து உதைத்ததால் மனோகரன் மயங்கி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்த அர வது உறவினர்கள் வந்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். மேலும் மனோகரனைத் தாக்கிய சாதி ஆதிக்கத்தி னர்களை கைது செய்யக் கோரி பாப்பம்பட்டி நால் ரோட்டில் தலித் மக்கள் சாலை மறியலில் ஈடுபட் டனர். இதைத்தொடர்ந்து சூலூர் போலீசார், தாக்கு தல் நடத்திய நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தாக்குதல் நடத்திய வர்கள் இதுவரை கைது செய்யப்பட வில்லை. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் கோவை மாவட் டச்செயலாளர் யு.கே.சிவ ஞானம், மாநில துணைத் தலைவரும், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளரு மான கோவை ரவிக்கு மார், மாநிலச்செயலாளர் கணேஷ், மாநில அமைப்புச் செயலாளர் எம்.பத்திரன் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனையில் அவ சர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெறும் மனோக ரனை நேரில் சந்தித்து ஆறு தல் தெரிவித்து நடந்த விபரங்களை கேட்டறிந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: