சென்னை, பிப். 29 – கூடங்குளம் அணு உலை தொடர்பாக தமிழக அரசின் வல்லுநர் குழு அளித்துள்ள அறிக்கை ஒருதலைப்பட்சமானது என்று அணு உலை எதிர்ப் புப் போராட்டக்குழு தலை வர் உதயகுமார் தெரிவித் துள்ளார்.கூடங்குளம் அணுமின் உலை பிரச்சனை தொடர் பாக முதல்வர் ஜெயலலி தாவை, தனது குழுவினரு டன் உதயகுமார் சந்தித்தார். இச்சந்திப்பு முடிந்து வெளியே வந்த உதயகுமார், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேற் கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார்.கூடங்குளத்தின் அமைக்கப்பட்டுள்ள அணு மின் உலையைத் திறக்கக் கூடாது என்று உதயகுமார் தலைமையிலான அணு உலை எதிர்ப்புக்குழுவினர் தொடர் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், மத்திய, மாநில அரசுகள் சார்பில் குழு அமைக்கப்பட்டது. குடி யரசு முன்னாள் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாமும் இப்பிரச்சனை யில் தலையிட்டு, அணு உலையால் ஆபத்தில்லை என்பதை விளக்கினார். எனினும் இம்முயற்சி பல னளிக்கவில்லை.எதிர்ப்புப் போராட்டங் கள் தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சனை தொடர்பாக ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் இனியன் தலைமையில் வல்லுநர் குழு ஒன்றை தமிழக அமைத்தது. இந்த குழு கூடங்குளம் சென்று ஆய்வு மேற்கொண் டது. போராட்டக்காரர் களையும், பல்வேறு தரப் பினரையும் சந்தித்துப் பேசி கருத்துக்களைப் பதிவு செய்தது. அதனடிப்படை யில், தமது அறிக்கையை செவ்வாயன்று அந்த குழு, முதல்வர் ஜெயலலிதாவி டம் தாக்கல் செய்தது.இந்த நிலையில் புத னன்று பிற்பகல் 2.30 மணி யளவில் அணு உலை எதிர்ப் புக் குழுத் தலைவர் உதய குமார், நான்குபேர் கொண்ட குழுவாக சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்.சுமார் 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. அப் போது அவரிடம் “தானே” புயல் நிவாரண நிதியாக ரூ. 1 லட்சத்துக்கான காசோலை யை உதயகுமார் அளித்தார்.சந்திப்புக்கு பின், செய்தி யாளர்களிடம் பேசிய உதயகுமார், கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை கள் பாராட்டுக்குரியவை; கூடங்குளம் விவகாரம் தொடர்பாக தமிழக அர சின் வல்லுநர் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கை ஒரு தலைபட்சமானது; எங்க ளுக்கு எந்த வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களு டனோ அல்லது அமைப்பு களுடனோ தொடர்பு கிடையாது; மத்திய அரசு இந்த விஷயத்தில் எங்க ளுக்கு எதிராக பிரச்சாரப் போர் நடத்தி வருகிறது என்று குறிப்பிட்டார்.மேலும், கூடங்குளத் தில் வசிக்கும் மக்களை முதல்வர் நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்புகி றோம்; முதல்வர் எங்களது கருத்துக்களை பொறுமை யுடன் கேட்டார்; ஆனால் உறுதி எதுவும் அளிக்க வில்லை என்றும் தெரிவித் தார்.

Leave A Reply

%d bloggers like this: