லாரிகள் மோதல்- 4 பேர் பலி
வத்தலகுண்டு, பிப். 29-
வத்தலகுண்டு அருகே காய்கறி லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் நான்கு பேர் பலியானார்கள்.மதுரை மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தைக்கு லாரியில் காய்கறி ஏற்றிக்கொண்டு ஜெயமணி, கற்பகநாதன் மற்றொரு ஜெயமணி ஆகிய விவசாயிகள் வந்து கொண்டி ருந்தனர். லாரியை தமிழன் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார். இந்த லாரி மற்றொரு லாரி மீது மோதியதில் 4 பேரும் பலியானார்கள்
.——————-
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 1600 அடியாக குறைப்பு
மேட்டூர், பிப். 29-
காவிரி நீர்பிடிப்பு பகுதி யில் மழை இல்லாததால் மேட் டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. புதனன்று (பிப். 29) நிலவரப்படி விநாடிக்கு 612 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. காவிரி டெல்டா பாசனத் துக்கு தண்ணீர் நிறுத்தப் பட்டுள்ள நிலையில், அணையி லிருந்து சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களுக்கு கடந்த சில தினங்களாக குடி நீருக்காக 1800 கன அடியாக இருந்த நீர் திறப்பு, புதனன்று முதல் விநாடிக்கு 1600 கன அடியாக குறைக்கப் பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81.27 அடி, நீர் இருப்பு 43.23 டி.எம்.சி
.——————–
தங்கம் பவுனுக்கு ரூ.112 அதிகரிப்பு
சென்னை, பிப். 29-
சென்னையில் புதனன்று (பிப். 29) ஒரு பவுன் தங்கம் ரூ. 21 ஆயிரத்து 616 ஆக இருந்த. இது செவ்வாய்க்கிழமை அன் றைய விலையை விட பவுனுக்கு ரூ. 112 அதிகமாகும். ஒரு கிராம் ரூ. 2,702-க்கு விற்றது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 62 ஆயி ரத்து 850 ஆகவும், ஒரு கிராம் ரூ. 67.30 ஆகவும் இருந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.