சென்னை, பிப். 29 -சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகரில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டுமென்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.இது தொடர்பாக சிபிஎம் மாநிலக்குழு உறுப் பினர் க.பீம்ராவ் எம்எல்ஏ தலைமையிலான குழுவி னர், மேயர் சைதை துரை சாமியை புதனன்று (பிப்.29) ரிப்பன் மாளிகையில் சந்தித் தனர். அப்போது பொதுமக் களிமிடமிருந்து பெறப் பட்ட கையெழுத்து படி வம், கோரிக்கை மனுவை யும், மேயரிடம் அளித்தனர்.அந்த மனுவில் கூறியி ருப்பதாவது;சைதை பகுதி 171வது வட் டத்தில் ஜோதியம்மாள் நகர் உள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் தாட ண்டர் நகர் திட்டப்பகுதி யில் 1988ம் ஆண்டு ஜோதி யம்மாள் நகர் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 24 வருடங்களாகியும் கழிப் பிடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் உள் ளனர்.அடிப்படை வசதி கோரி இப்பகுதியில் உள்ள மக்கள் பலவிதமான போராட்டங் களை நடத்தியும் அரசு நிர் வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. எனவே, இப்பகு தியில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர வேண்டும்.குப்பை170வது வட்டத்தில் உள்ள ஆலந்தூர் சாலை யில் குப்பை கொட்டும் வளாகம் உள்ளது. இதனால் காற்று, நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளது. குப்பை தொட் டியில் இருந்து வரும் கொசு, ஈக்கள் கொத்துக்கொத்தாக உணவில் வந்து உட்காரு கின்றன.இதனால், ஜோதியம் மாள் நகர், செட்டிதோட் டம், நெருப்பு மேடு, ஜோதி தோட்டம் ஆகிய பகுதி களில் உள்ள மக்கள் ஆணைக்கால், ஆஸ்துமா, டி.பி., தோல்வியாதிகள், வாந்தி, அலர்ஜி போன்ற வற்றால் பாதிக்கப்பட்டுள் ளனர். குடியிருப்பு பகுதிக ளுக்கு மத்தியில் குப்பை தொட்டி உள்ளதால், உறவி னர்கள் வீட்டுக்கு வருவ தில்லை. ஆகவே, இந்த குப்பை கொட்டும் வளா கத்தை மக்கள் வசிக்காத பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு அந்த மனு வில் கூறப்பட்டிருந்தது.மனுவைப் பெற்றுளக் கொண்ட மேயர், சென்னை நகரில் உள்ள 7 குப்பை கொட்டும் வளாகங்களை யும், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாற்றப் பட உள்ளது. அதில் 170வது வட்டத்தில் உள்ள ஜோதி யம்மாள் நகர் குப்பை கொட்டும் வளாகமும் அடங்கும் என்றார்.171வது வட்டத்தில் பாதாள சாக்கடை அமைக் கும் பணியை சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரி யம் மேற்கொள்கிறது. இது தொடர்பாக வாரியத்திற்கு மாநகராட்சி சார்பில் பரிந் துரை கடிதமும், இந்த மனு வும் அனுப்பி வைக்கப்படும் என்றும் மேயர் கூறினார்.இச்சந்திப்பின் போது மாவட்டக்குழு உறுப்பினர் கள் எஸ்.குமாரதாசன், கே.மணிகண்டன், பகுதிச் செயலாளர் டி.சி.கே.சுந் தரம், இஸ்மாயில், கிரி, இந் திய ஜனநாயக வாலிபர் சங்க தென்சென்னை மாவட்டத் தலைவர் ஜி.வெங்கடேஷ் உள்ளிட்டோர் உடனிருந் தனர்.

Leave A Reply

%d bloggers like this: