பார்சிலோனா: 2ஜி அலைக்கற்றை மோசடிகள் காரணமாக உச்சநீதிமன்றம் 122 அலைபேசி உரிமங்களை ரத்து செய் துள்ளது. 3ஜி சேவை அறிமுகப்படுத்தப் பட்டிருந்தபோதிலும் 95 சதவீத பகுதி களுக்கு 3ஜி சேவைகள் சென்றடைய வில்லை. இந்த நிலையில் 4ஜி அலைக்கற் றைகளுக்கான ஏலம் இவ்வருட இறுதியில் நடைபெறும் என்றும் மேலும் 2ஜி சேவை களுக்கான வானொலி அலைக்கற்றைகள் பிரச்சனையும் இறுதி செய்யப்படும் என் றும் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்டு மாநாட்டின் இந்தியா டே நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் கபில் சிபல், இந்த வருட இறுதி யில் 4ஜி அலைக்கற்றை ஏலம் நடை பெறும். எங்களிடம் அனைவருக்கும் போதுமான அலைக்கற்றை இருப்பு உள்ளது.பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கியது போக அரசிடம் போதுமான வானொலி அலைக்கற்றைகள் உள்ளன. 122 அலை பேசி உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனினும் ஒரே நேரத்தில் அலைக்கற்றை ஏலத்தை நடத்த அரசு விரும்பவில்லை. தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவே இறுதியானது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.