ஹாக்கி அணிக்கு நிதியளிப்பு
ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ள இந்திய ஹாக்கி வீரர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு ரூ.1.16 கோடியை சகாரா நிறுவனம் வழங்குகிறது. மிகச்சிறப்பாக ஆடிய சர்தாரா சிங், சந்தீப்சிங் ஆகிய இருவருக்கும் தலா ரூ.11 லட்சமும், மற்ற வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் உதவியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் அளிக்கப்படும் என்று சகாரா கூறியுள்ளது. நிதிக்குரிய வரியையும் சகாரா நிறுவனமே செலுத்திவிடும். இதனுடன் சேர்த்தால் சகாரா நிறுவனம் இந்திய அணிக்கு ரூ.1.29 கோடியை அளிக்கிறது.
———————-
பிளேட்டர் இரங்கல்
இந்திய கால்பந்தின் ஒலிம்பிக் அணித்தலைவர் சைலேந்திர நாத் மன்னாவின் மறைவுக்கு பிபா தலைவர் செப் பிளேட்டர் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய கால்பந்துக்கு அவர் ஆற்றிய பங்குக்குரிய அங்கீகாரம் அவருடைய வாழ்நாளிலேயே வழங்கப்பட்டது என்றும் மன்னா ஒரு உற்சாகமூட்டும் தலைவர் என்றும் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பொறுப்பு தலைவர் ஸாங் ஜிலாங், மன்னாவின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு என்று தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: