கிரீஸ் நாட்டின் குடிமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ் டோஸ் பாய்போட்சிஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். ஆளும் ‘பசோக்’ கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் அவரும் இருக்கிறார். மார்ச் 18 ஆம் தேதி ஆளும் கட்சியின் தலைவர் தேர்வு நடக்கிறது. ஏற்கனவே பொருளாதாரத்துறை அமைச்சரான மிச்சாலிஸ் கிறிஸ்சோஹோடிஸ் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். தற்போதைய நிதியமைச்சர் இவான்ஞ்லேசும் இந்தப்போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ‘பசோக்’ வெற்றி பெற்றாலும் தற்போது மக்களிடம் கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது.
* * *
பிரிட்டனில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள் என்று அர்ஜெண்டினாவின் தொழிற்துறை அமைச்சர் தேபோரா கியோர்கி கருத்து தெரிவித்துள்ளார். பெரிய அளவில் அங்கிருந்து இறக்குமதி செய்து கொண் டிருக்கும் 20 பெரிய நிறுவனங்களுக்கே அந்த கோரிக்கை யை அவர் விடுத்திருக்கிறார். தங்களுக்குச் சொந்தமான மால்வினாஸ் தீவுகளை பிரிட்டன் ஆக்கிரமித்துக் கொண் டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் இந்தக் கருத்தை அவர் முன்வைத்துள்ளார்.
* * *
வரும் பட்ஜெட்டில் அணுசக்திக்கு கூடுதல் நிதியை ஒதுக் கீடு செய்ய தென் ஆப்பிரிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. 39 பில்லியன் டாலர் நிதி கூடுதலாக ஒதுக்கப்படவுள்ளது என்று தெரிவித்த தென் ஆப்பிரிக்க எரிசக்தித்துறை அமைச்சர் டிப்புவோ பீட்டர்ஸ், இந்த நிதியும் போதிய அளவில் இல்லை. இருந்தாலும் 2029 ஆம் ஆண்டுக்குள் அணுசக் தியின் அளவை 9.6 ஜிகா வாட்டாக அதிகரிப்பதென்று முடிவு செய்திருக்கிறோம். இதனால் வருங்காலத்தில் நிதி அதிகரிப்பு இருக்கும் என்று குறிப்பிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: