பல ஆண்டுகளுக்கு முன்பாக சராசரியாக ஒரு நாளைக்கு 18 நிமிடங்கள் சிரித்துக் கொண்டிருந்த மனிதன் தற்போது வெறும் ஆறு நிமிடங்களுக்குக் குறைவாகவே சிரிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது பற்றிக் கருத்து தெரிவித்துள்ள மருத்துவ ஆய்வாளர் எஸ்.கே.குப்தா, குழந்தைகளைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 300 முதல் 400 முறை சிரிக்க முடியும். வயதாக, ஆக இது குறைந்து கொண்டே வரும். மருத்துவ ரீதியாகவே சிரிப்பு ஒரு மருந்து என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் உலகில் அழுத்தம் அதிகரித்த நிலையில் மனிதன் வாழ்கிறான். கிட்டத்தட்ட 70 சதவிகிதம் நோய்கள் அழுத்தம் தொடர்பானவைதான். இதிலிருந்து தப்பிக்க புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள். மகிழ்ச்சியான வாழ்க்கையே மருந்துதான் என்கிறார் ஆய்வாளர் குப்தா.

Leave A Reply

%d bloggers like this: