திருச்சிராப்பள்ளி, பிப்.29-
திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, குளோபல் மனிதஉரிமைகள் கழகம், டெக்கான் நுகர் வோர் உரிமைபாதுகாப்புக் கழகம் சார்பில் சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு குளோபல் மனிதஉரிமை கழகத் தின் தேசிய தலைவர் பாரதிராஜா வரவேற்றார். திருச்சி மாவட்ட நீதிபதி ஜோதிராமன்(பயிற்சி) தலைமை வகித் தார். துணைத்தலைவர் எம்.முருகன், அமைப் பாளர்கள் கவிதா, முத்தையன், வரதராஜன், காசி நாதன், மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி தலைமை குற்ற வியல் நடுவர் ராஜ சேகரன், சார்பு நீதிபதி தவமூர்த்தி, குற்ற வியல் நடுவர் எண்(2) ராஜேந்திரன் ஆகியோர் சட்ட விளக்கங் களையும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகளையும் விளக்கினர். திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தியாக ராஜன், செயலாளர் அன்பழகன், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுரு கன், காவல் உதவி ஆணையர் காந்தி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். தொடர்ந்து பாஸ்போர்ட் அதிகாரி பால முருகன் மற் றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத் தவர் களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.பிரான்சிஸ் பாண்டியன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: