கோவை, பிப். 29-கோவையில் நடப்பு நிதியாண்டான ஏப்ரல் 2011 முதல் ஜனவரி 2012 வரை, மத்திய கலால், சுங்கம் மற்றும் சேவை வரியாக ரூ.728.75 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மத்திய கலால், சுங்கம் மற்றும் சேவை வரித்துறைக்கான ஆணையர் சுப்ரமணியன் தெரிவிக்கையில், இந்த நிதியாண்டைப் பொறுத்தவரையில், ஜனவரி 2012 வரை மத்திய கலால் வரியாக ரூ. 348.22 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.182.26 கோடியாக இருந்தது. இதன் மூலம், கலால் வருமானம் 90 சதவிகித அளவிற்கு உயர்ந்துள்ளது.இதேபோல், ஜனவரி 2012 வரையிலான காலத்திற்கான சுங்க வரியாக ரூ.92.41 கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.121.22 கோடியாக இருந்தது. இதேபோல், இந்த நிதியாண்டைப் பொறுத்தவரையில் சேவை வரியாக இதுவரை ரூ.288.12 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்டதைக் காட்டிலும் 29 சதவிகிதம் அதிகமாகும்.மேலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விவரங்களை எளிதில் அலுவலகத்திற்கு தெரிவிக்கும் வகையில் ஆன்-லைன் வசதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தங்க நகை ஏற்றுமதியில் உள்ள பின்னடைவை நீக்கும் வகையில் ஏற்றுமதியாளர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தணிக்கை மற்றும் தடுப்புப் பிரிவு அலுவலகத்தின் ரூ.14.46 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில்கொண்டாடப்பட்ட மத்திய கலால் மற்றும் சர்வதேச சுங்க தினத்தையொட்டி, 2010-11ம் நிதியாண்டில் அதிக அளவில் கலால், சுங்கம் மற்றும் சேவை வரிசெலுத்தியவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

Leave A Reply