தஞ்சாவூர், பிப். 29 -தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக சசிகலா வின் கணவர் நடராஜன், நீதிபதி முன்பு புகார் தெரிவித்தார்.நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சசி கலாவின் கணவர் நடராஜன், திருச்சி சிறையில் அடைக் கப்பட்டிருந்தார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசா ரிக்க அனுமதி கேட்டு, தஞ்சை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனுவை நீதிபதி முருகன் விசாரித்தார். அப் போது, நடராஜனும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தன் மீது போலீசார் பொய் வழக்கு போட்டிருப்பதாவும், தன்னை வேவு பார்க்க உளவுத்துறையைச் சேர்ந்த போலீ சார் திருச்சி சிறைக்கே வந்துவிட்டதாகவும் நடராஜன் புகார் தெரிவித்தார். மேலும், இவர்களால் தனது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், சிறையிலேயே தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாகவும் குற்றம் சாட்டி னார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடராஜ னை ஒருநாள் (பிப்.29) மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.காவல் நீட்டிப்புபோலீஸ் விசாரணைக்குப் பின்பு, நடராஜன் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை மார்ச் 14-ம் தேதி வரை திருச்சி சிறையில் அடைக்க தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave A Reply

%d bloggers like this: