நாமக்கல், பிப்.29-
நாமக்கல்லை தலைமை யிடமாக கொண்டு செயல் படும் தென்னிந்திய எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமை யாளர்கள் சங்கத்தினர் பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்தியன் ஆயில் கார்ப் பரேசன், பாரத் பெட்ரோலி யம், இந்துஸ்தான் பெட்ரோ லியம் கார்ப்பரேசன் போன்ற எண்ணெய் நிறுவனங்களி டம் 3600 எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள், வாடகை ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகின்றன. இந்த லாரிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண் டிச்சேரி உள்ளிட்ட மாநி லங்களில் உள்ள கேஸ் நிரப் பும் மையங்களுக்கு, கேஸ் எடுத்துச் செல்லும் பணி யினை செய்து வருகிறது. இந்நிலையில், லாரி உரி மையாளர்கள் மற்றும் எண் ணெய் நிறுவனங்களுட னான வாடகை ஒப்பந்தம் கடந்தாண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந் தது.
எனவே, புதிய வாடகை ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 600 டேங்கர் லாரிகளுக்கு கூடு தலாக பணி ஒப்பந்தம் வழங்க வேண்டும் என வலி யுறுத்தி கடந்த ஜனவரி 12ந் தேதி முதல் 19ம்தேதி வரை வேலை நிறுத்தப் போராட் டத்தில் லாரி உரிமையாளர் கள் ஈடுபட்டனர். இப்போ ராட்டத்தினை அடுத்து சென்னையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற் றது. இதில் கூடுதல் லாரி களுக்கு அனுமதி அளிப் பது. பிப்ரவரி 15ம் தேதிக்குள் புதிய வாடகை ஒப்பந்தம் செய்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது வரை எண்ணெய் நிறுவ னங்கள் எந்தவித வாடகை ஒப்பந்தம் மேற்கொள்ள வில்லை.
இந்நிலையில் நாமக் கல்லில் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் செயற்குழு கூட்டம் செவ் வாயன்று நடைபெற்றது. இதில் லாரி உரிமையாளர் களின் கோரிக்கையை நிறை வேற்றி பணி ஆணை வழங் கும் வரை வேலை நிறுத்தத் தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட் டம் பிப்ரவரி 29ந் தேதி நள் ளிரவு முதல் துவங்குவது எனவும் முடிவு செய்யப்பட் டுள்ளதாக தென்னிந்திய எல் பிஜி டேங்கர் லாரி உரிமை யாளர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் தெரிவித் துள்ளார்.

Leave A Reply