சென்னை, பிப். 29-கூடங்குளத்தில் மின் உற்பத்தியை உடனடியாக தொடங்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் பிப்ரவரி 29 புதனன்று சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தி துவங் குவதற்கு ஆட்சேபணை எழுந்தபோது, அணுமின்நிலை யத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடு சரியாக உள்ளதாக கூறியது. அடுத்து தமிழ்நாடு மாநில அரசு நியமித்த நிபுணர் குழுவும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடு சரியாக செய்யப்பட்டுள்ளதென மாநில அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. இப்பின்னணியில் இரண்டு நிபுணர் குழுக்களின் அறிக்கை களை பரிசீலித்து, கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தியை துவங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய-மாநில அரசுகளை மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் பெரும் பகுதியை தமிழகத்திற்கு வழங்கிட வேண்டு மென்றும், முன்னாள் குடியரசுத் தலைவர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் கூடங்குளம் மற்றும் சுற்று வட்டார கிராமப்புற மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தி, வாழ்வாதார பணிகளுக்காக ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமெனவும் மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.