புதுதில்லி: இனி உங்கள் அலைபேசி யிலேயே அறிவியல் பாடங்களை அறிந்து கொள்ளலாம். இதற்காக விஞ்ஞான் பிர சார் மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இணைந்து இலவச குறுஞ்சேவையை அளிக்க உள்ளது. இரு நாள் தேசிய அறிவியல் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சயன்ஸ்மொபைல் சேவை அளிக்கப்பட உள்ளது என்று பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆக்சலரேட்டர் மையத்தின் இயக்குநர் அமித் ராய் தெரிவித்தார்.அறிவியல் பயன்பாடு மற்றும் ஞானம் இல்லாத சமுதாயம் முழுமையான வளர்ச் சியடைந்த சமூகமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். சக்தி, அதன் பயன் பாடுகளுக்குப் பின்னாலிருக்கும் செயல் களை நாம் புரிந்து கொள்ளாவிட்டால் நாம் இருட்டிலே வாழ்பவர்களாவோம். விஞ்ஞான முன்னேற்றத்தை மாயமந்திரம் என்று புரிந்து கொள்பவர்களாவோம். எனவே அறிவியல் குறித்த ஞானம் மிக முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.நம் நாட்டிலுள்ள அலைபேசிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100 கோடி யைத் தொட்டு விட்டது. அந்த அளவிற்கு அலைபேசிகள் நம் வாழ்க்கையில் ஊடு ருவியுள்ளன. எனவே இந்தக் குறுஞ்சேவை மூலம் அறிவியல் பாடங்களை அளிக்கும் திட்டம் சரியான அறிவியல் கலாச்சார மாகும் என்று அமித் ராய் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: