புதுக்கோட்டை, பிப்.29-
புதுக்கோட்டை மாவட் டம் மின்னாத்தூரில் பல மாதங்களாக குடிநீர் வழங் கப்படாததைக் கண்டித்து புதன்கிழமையன்று கிராம மக்கள் காலிக்குடங்களை உடைத்து குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க் சிஸ்ட் கட்சியினர் தலை மையில் முற்றுகைப் போராட் டம் நடத்தினர்.குன்றாண்டார்கோவில் ஒன்றியத்திலுள்ள மின் னாத்தூர் கிராமத்தில் 500 குடும்பங்களுக்கும் மேல் வசித்து வருகின்றன. இக் கிராமத்தில் 30 ஆயிரம் லிட் டர் கொள்ளளவுள்ள இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இதில் ஒரு தொட்டி அமைக் கப்பட்டு 30 ஆண்டுகளுக் கும் மேலாவதால் மிகவும் பழுதடைந்து நீரேற்ற முடி யாத நிலையில் உள்ளது. இன்னொரு தொட்டிக்கு நீரேற்றும் மின்மோட் டார் பழுதடைந்துவிட்டதால் கடந்த சில மாதங்க ளாகவே அப்பகுதியில் குடிநீர் விநி யோகம் தடைபட் டுள்ளது. மின்னாத்தூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் இன்னமும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. துணைத் தலை வரைத் தேர்ந்தெடுப்பதற்கு அவ்வூராட்சி மன்றத் தலை வர் பல வகையிலும் முட்டுக் கட்டையாக இருந்து வருவ தாகவும், இதனாலேயே இவ்வூராட்சியில் எவ்வித மக்கள் நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந் துள்ளது. மேலும் தேசிய வேலை உறுதித் திட்டத் திலும் இக்கிராம மக்க ளுக்கு பல மாதங்களாக வேலை வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.இந்நிலையில் புதிய மின் மோட்டார் பொருத்துவ தோடு, சேதமடைந்துள்ள பைப்லைனை சீர்செய்து உடனடியாக மின் வினி யோகம் வழங்க வேண்டும். பழுதடைந்த நீர்த்தேக்கத் தொட்டிக்குப் பதிலாக புதிய தொட்டி அமைக்கப் பட வேண்டும். குடியிருப் புகள் விரிவாக்கத்திற்கேற்ப தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற் றுகைப் போராட்டம் நடை பெற்றது.போராட்டம் வெற்றிமார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மின்னாத் தூர் கிளை மற்றும் பொது மக்கள் சார்பாக நடை பெற்ற இந்தப் போராட் டத்திற்கு கட்சியின் கிளைச் செயலாளர் எம்.முருகேசன் தலைமை வகித்தார். போராட் டத்தில் கலந்துகொண்டு கட்சியின் மாவட்டச் செய லாளர் எம்.சின்னத்துரை கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், ஒன் றியச் செயலாளர் எஸ். பீமராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பி.மருதப்பா, ஒன்றியக்குழு உறுப்பினர் கள் கே.தங்கவேல், எம். ரெங்கராசு, எஸ்.பெருமாள், முனியய்யா, பழனிச்சாமி, சேகர், மூக்கையா, ரெங்க ராசு உள்ளிட்டோர் பேசி னர்.போராட்டத்தைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய ஆணை யர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். கீரனூர் காவல் ஆய்வாளர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த் தையில் வருகின்ற மார்ச் 25 ஆம் தேதிக்குள் நிரந்தரமாக குடிநீர்ப் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்ப தெனவும், அதற்கிடையில் உடனடியாக இரண்டு சிறு மின் நீர்த்தேக்கத்தொட்டி அமைத்து ஓரிரு நாட்களில் அப்பகுதி மக்களுக்கு குடி நீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதெனவும் முடிவெடுக் கப்பட்டது.பேச்சுவார்த்தையின் முடிவுகளை போராட்டம் நடத்திய மக்களிடம் விளக் கிய எம்.சின்னத்துரை, குறிப் பிட்ட காலக்கெடுவிற்குள் பிரச்சனைக்கு தீர்வு காணப் படாவிட்டால் போராட் டம் மேலும் தீவிரமடை யும் எனவும் தெரிவித்தார்.இதனையடுத்து போரா ட்டம் ஒத்தி வைக்கப்பட் டது.

Leave A Reply

%d bloggers like this: