கிராண்ட் மாஸ்டர்கள் தீப் சென் குப்தா, தேஜஸ் பக்ரே, திவ்யேந்து பருவா ஆகிய மூவரும் தங்களை விடக் குறைவான புள்ளிகளை உடைய வீரர்களிடம் வெல்லத் திணறினர். உயரிய ஐந்து அணிகளும் மூன்றாவது சுற்றின் முடிவில் வெற்றிப்புள்ளிகளில் சமமாக உள்ளன.தேசிய சதுரங்க அணி சாம்பியன் போட்டிகள் கோவாவின் பஞ்சிம் நகரில் நடைபெற்று வருகின்றன.
மூன்று சுற்றுகளின் முடிவில் பெட்ரோலியம், ரெயில்வே ஏ மற்றும் பி அணிகள், ஏர் இந்தியா, தமிழ்நாடு ‘பி’ ஆகிய அணிகள் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.முன்னாள் சாம்பியன் ஏர் இந்தியாவில் ஆடும் கிராண்ட் மாஸ்டர் தேஜஸ் பக்ரே உள்ளிட்ட மூவருடன் மகாராஷ்டிரா அணி வீரர்கள் சமன் செய்து கொண்டனர். ராகுல் ஷெட்டியின் வெற்றியால் ஏர் இந்தியா 2.5-1.5 புள்ளிகளில் வென்று மூன்றாவது வெற்றிப்புள்ளியைப் பெற்றது.அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு ஒரு அணியைக் களம் இறக்கியுள்ளது. அதில் ஆடும் கிராண்ட் மாஸ்டர் பருவாவுடன் மகாராஷ்டிரா ‘பி’ அணியின் சின்மய் குல்கர்னி சமன் செய்தார். இரு அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் சமன் செய்து கொண்டன. தமிழ்நாடு ‘ஏ’ அணியை ரயில்வே ‘ஏ’ வீழ்த்தியது. எல்ஐசியை தமிழ்நாடு பி வீழ்த்தியது.

Leave a Reply

You must be logged in to post a comment.