ரயில்வே பாதுகாப்புப் படை சட்டத்தை திருத்துவதன்மூலம் மாநில உரிமையில் மத்திய அரசு அத்துமீறி நுழைகிறது. இதற்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப் பைக் காட்டியுள்ளன. ரயில்வே இந்தியா முழு வதும் நரம்பு மண்டலம்போல் விரிந்து கிடப்ப தால், அதன் பாதுகாப்பை மத்திய அரசு தன் கையில் எடுத்துக்கொள்ளப் போவதாக அடா வடி செய்கிறது. ரயில் பாதையும், ரயில் நிலையங் களும் மாநிலங்களுக்கு உள்ளேதான் இருக்கின் றன. தற்போது திருட்டு உட்பட பல்வேறு குற்றச் செயல்களை கண்காணிப்பதும் நடவடிக்கை எடுப்பதும் மாநில அரசின் பொறுப்பாக உள்ளது. ஏனெனில், ‘பொது ஒழுங்கு’ மற்றும் ‘காவல்’ என்பவை மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. இவற்றை மத்திய அரசு அபகரித் துக்கொள்ள முயல்வது மாநில உரிமையைப் பறிப்பதாகும். மேலும், ரயில்வே பாதையும், ரயில் நிலையமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் தனித்தீவு போலாகி விடும். இதனால் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பும் சிக்க லாகிவிடும். ஆகவே, மத்திய அரசின் இந்த அநியா யமான முயற்சிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. உலகமயப் பாதையில் தலைதெறிக்க பய ணப்படும் மத்திய அரசு, மாநில உரிமைகளை காவுகேட்பது இது முதல் முறையல்ல. சில நாட்களுக்கு முன்புதான் தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது சம்பந்தமாக மத்திய அரசு கும் மாநில அரசுகளுக்கும் மோதல் எழுந்தது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வலுவான எதிர்ப்பால் மத்திய அரசு தற்காலிக மாக அந்த முயற்சியில் பின்னுக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.கல்வியை அவசர காலத்தில் இந்திராகாந்தி அம்மையார் மாநிலப் பட்டியலிலிருந்து பெயர்த் தெடுத்து பொதுப் பட்டியலுக்கு கொண்டு போனார். அன்று தொடங்கி இன்று வரை கல்வித் துறையில் மத்திய அரசின் எதேச்சதிகாரமான பல்வேறு செயல்பாடுகளால் கல்வியும் மாநில உரிமையும் பாதிக்கப்படுகிறது. தற்போது அந்தக் கல்வியை நேரடியாக மத்தியப் பட்டியலுக்கே கொண்டுபோக மறைமுகமாக மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. இதனை தமிழகம் உள் ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பதோடு, சில பிரச்சனைகளில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளன. சர்க்காரியா கமிஷன் பரிந்துரைத்த மாநில உரிமைகளைக்கூட மத்திய அரசு வழங்க மறுத்து வருகிறது. இந்தியா பல மொழி, பல இனம், பல மதம் என பல்வேறு வேற்றுமை களை உள்ளடக்கிய நாடு. அரசியல் சட்டத்தில் இந்தியா என்பதை இந்திய ஒன்றியம் என்றே வரையறை செய்துள்ளோம். ஆனால் அந்த வரை யறையின் உண்மைப் பொருளை உள்வாங்கா மல், மாநில அரசுகளை தங்களின் காலடியில் நசுக்கும் அதிகார மமதை கொண்ட மையமாக மத்திய அரசை மாற்றியமைக்க தொடர்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவும் உலக மயச் சூழலில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந் திய இயற்கை வளத்தையும், கனிமங்களையும், நீராதாரத்தையும், மனித ஆற்றலையும் தாரை வார்த்துக் கொடுக்க தனக்கு எல்லையற்ற அதிகாரம் வேண்டும் என்ற கொடும்பசியோடு மத்திய அரசு செயல்படுவது நல்லதல்ல. ஏற் கெனவே மேற்கு வங்கத்தை ஆண்ட ஜோதிபாசு முயற்சியில் காஷ்மீர், தமிழகம், கேரளம், திரிபுரா உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தி மாநில உரிமைக்கு குரல் எழுப்பினர். இன்று அதைவிட வலிமையாக ஒற்றுமையாக மாநிலங்கள் தங்கள் உரிமையைப் பாதுகாப் பதற்காக போராட வேண்டியுள்ளது. பதவிக்குக் கைகொடுத்து உரிமையை பலி கொடுக்கும் போக்கை மாநிலக் கட்சிகள் கைவிட்டு, மாநில உரிமைக்காக சமரசம் அற்ற சமர்தொடங்க முன்வர வேண்டும். இடதுசாரி கட்சிகள் ஏற்கெனவே இப்போரில் முனைமுகத்தில் உள்ளன. நாகையில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடும், மாநில உரிமையைப் பாதுகாக்க அறைகூவல் விடுத்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: