காரைக்கால், பிப். 29-காரைக்காலில் மாவட்ட ஆட்சியராக இருந்த பிராங்லின் லாடின் குமார் தனது சொந்த மாநி லமான மிசோரம் சென்று விட்டார். அதன் பிறகு சப் கலெக்டராக இருந்த அசோக் குமார் புதனன்று ஆட்சியராக பதவியேற் றார். அவர் இதற்கு முன்ன தாக சப் கலெக்டராக காரை பகுதியில் பணியாற் றியவர். தற்போது நில ஆர் ஜிதப்பணிகள் நிறைய உள் ளன. ஆர்ஜிதப்பணிகள் நடந்து விட்டாலே பல திட்டங்கள் செயல்பாட் டுக்கு வந்துவிடும். காரை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடை பெறும். அரசு அலுவலர் கள் காலத்தோடு பணிக்குச் செல்ல அறிவுறுத்தப்படும். தாமதமாக வந்தால் கடு மையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மருத் துவமனையில் உள்ள குறைகள் தீர்க்கப்படும். சாலை மறியல் பிரச்ச னைக்கு தீர்வு அல்ல. சம் பந்தப்பட்ட அதிகாரிகளி டம் முறையிட்டால் நட வடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் அசோக் குமார் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: