மும்பை, பிப். 29-
மும்பை பிராந்திய காங் கிரசின் முன்னாள் தலைவர் கிருபா சங்கர் சிங் பினாமி சொத்துக்குவித்தது தொடர் பாக, மோசடி, ஏமாற்றுதல், ஊழல் குற்றச்சாட்டுகளில் காவல்துறை செவ்வாய்க் கிழமை எப்ஐஆர் பதிவு செய்தது.ஊழல் தடுப்புச் சட்டப் படி, பினாமி சொத்துக்க ளை குவித்த கிருபா சங்கர் மீது விசாரணை நடத்த வேண்டும் என மும்பை உயர்நீதி மன்றம் உத்தர விட்டு, ஒரு வாரம் ஆன நிலையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருபா சங்கர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும், எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டுமென காவல் துறை ஆணையரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சஞ்சய்தத் திவாரி என்பவர் தாக்கல் செய்த பொதுநலன் வழக்கு அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. குடும்ப உறுப்பினர் களுக்குத் தரப்பட்ட பல கோடி ரூபாய் பரிசு, மகன், மருமகள் விலை உயர்ந்த பிஎம்டபிள்யு காரை உத்தர வாத நபர் தெரியாத நிலை யில் கடனில் வாங்கி இருப் பது, பலகோடி ரூபாய் பரி மாற்றத்திற்கு உரிய ரசீது இல்லாத நிலை குறித்து, கேள்வி எழுப்பிய நீதிமன் றம் விசாரணைக்கு உத்தர விட்டது.
பொதுநலன் வழக்கு மனுவில் சொகுசு பங்களா உள்பட 15 வித சொத்துப் பட்டியல் விவரங்கள் தெரி விக்கப்பட்டு இருந்தன. கிருபா சங்கர் அரசியல் தலைவராக ஆன பின்னரே அவரது குடும்பத்தினர், பல சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதை நீதிமன்றம் உணர்ந்துள்ளது.

Leave A Reply