மாணவர்களை முற்றிலும் ஈவு இரக்க மின்றி உறிஞ்சும் பள்ளிகளின் தயவில் தான் தற்போது கல்வி இருக்கிறது. இளம் குழந்தை கள், கல்வி என்ற பெயரில் பள்ளி எனும் கூண்டுக்குள் அடைக்கப் பட்டு கள்ளமில்லா குழந்தைப் பருவத் தின் சந்தோஷங்கள் அப கரிக்கப்படுகின்றன. அபரிமிதமான வீட்டுப் பாடங்கள், பாடங்களை மீண்டும் மீண்டும் எழுத வைக்கும் மிரட்டல்கள், ஆதிக்கம் செலுத்தும் ஆசிரியர்கள், அவர்களின் கடு மையான நடவடிக்கைகள் இளஞ்சிறார்களை பிழிந்து எடுத்துவிடுகின்றன. மிகுதியான வகுப்புகளினால் குழந்தைகளுக்கு உணவு உட்கொள்வதற்கான நேரம் கூட இருப்ப தில்லை. பெரும்பாலான பள்ளிகளில் இப் போக்கு காணப்படுகிறது.
இதனை இப்பள்ளி கள் தங்களது சாதனைகளாக பீற்றிக் கொள் கின்றன.கணிதவியல் கணக்குகள், தானே அறிய வேண்டிய கணித முறைகள் கூட மனனம் செய்யப்படுகின்றன. இவை அட்டை போல் குழந்தைகளின் நெஞ்சுறுதியை வற்றச் செய் கின்றது. மூளைகளில், குறுகிய காலமே தங் கக்கூடிய திணிக்கப்பட்ட அறிவைத் தவிர வேறு ஏதுமில்லை. குழந்தைகளின் தனித் தன்மையும் அனைத்துவித வளர்ச்சியும் முளையிலேயே கிள்ளி எறியப்படுகின்றன.மாணவர்களை பளுதூக்கும் கூலிகளாக பயிற்சி அளிக்கும் பள்ளிகளை ஒருவேளை ஒருவர் கை தட்டி பாராட்டலாம். ஆனால் நிலைத்து நில்லாத அறிவுத் திணிப்பினால் குழந்தைகள் வாழ்க்கையில் எவ்வித முக் கியத்துவமும் பெற இயலாவிடினும் குறைந்த பட்சம் கூலித் தொழிலாளியாக மாறுவதற்கு இப்பயிற்சிகள் ஒருவேளை உதவலாம்!பெரும்பாலான குழந்தைகள், குழந்தை இயேசுவாக மாறிவிட்டனர். இயேசு 30 வயதில் சிலுவை சுமந்தார்.
ஆனால் தற்போது ஒவ் வொரு 5 வயது குழந்தையும் புத்தகச் சிலுவை சுமந்து இயேசுவாக மாறிவிட்டனர். நாடாளு மன்றத்தில் ஆர்.கே.நாராயணன் அவர்கள் குழந்தைகளின் புத்தகச் சுமை குறித்து உதிர்த்த வார்த்தைகள் நாம் நினைவுகூரத் தக்கதாகும். சுமக்க இயலாமல் புத்தகங்களை சுமந்து செல்லும் பள்ளி சிறுவர்-சிறுமிகளை கண்ணுற்றபோது தம் நெஞ்சில் குருதி பெருக்கெடுத்து ஓடியதாக குறிப்பிடுகிறார். இச்சுமை ஏற்றம் அவர்களின் உள்ளங்களை மேன்மையுறச் செய்யவில்லை. மாறாக அவர் களுக்கு கூனல் முதுகுகளை உண்டாக்கி உள்ளது. இந்த பைச்சுமை பள்ளி வாழ்க் கையை பெரும் துயரம் மற்றும் விரும்பத்தகாத ஒன்றாக ஆக்கிவிடுகிறது.இளம் பருவத்தினரின் வாழ்க்கையில் ஆட்டமும் பாட்டமும் பின்னிப் பிணைந்திருக் கும். “மகிழ்வுடன் கற்பவை என்றும் மறப்ப தில்லை” என விளம்புகிறார் ஆல்பிரட்.
மேலே சொல்லப்பட்ட பள்ளிகளில் தற் போதைய பள்ளித் தலைமுறையினர் விளை யாட்டு என்பதே அறியாதவர்களாக உள்ளனர். வாரத்தில் விளையாட்டிற்கு ஒரு மணி நேரம் கூட அற்றவர்களாகவும், ஏன்? விளையாட்டு மைதானம் கூட இல்லாதவர்களாகவும் இருக்கின்றனர் என்பதை எண்ணும்போது வருத்தம் எழுகிறது. வீட்டுப்பாடங்கள், பாடங் களை மீண்டும் மீண்டும் எழுதவைக்கும் தண்டனைகள் மற்றும் மறுநாள் தேர்வுக்கான தயாரிப்பு போன்றவை அவர்களை நடுநிசி வரை வேலை செய்ய இட்டுச் செல்கிறது. இவை அவர்களை வலுவிழக்கச் செய்கின் றன. இதனால் மாலையில் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு இன்றியும் காலையில் உற்சாகம் அற்றும் காணப்படுகின்றனர். ஒரு நாளைக்கு 13 வகுப்புகளும் ஞாயிறு சிறப்பு வகுப்புகளும் அவர்களை மேலும் நலிவுறச் செய்கின்றன.பிளாக் என்பவரின் “கூhந ளுஉhடிடிட க்ஷடில” என்ற கீழ்க்கண்ட கவிதை வரிகள் தன் ஆசிரியரால் ஞாயிறு விடுமுறையை இழந்த ஒரு மாணவனின் ஏக்கங்களை நன்கு எடுத் துரைக்கும்.“ஒரு வெம்மை காலைப்பொழுதில் பள்ளி செல்ல வேண்டும்!அது எல்லா இன்பங்களையும்தொலைக்கிறதுஇளஞ்சிறார்களின் நாள்கள்பெருந்துயரிலும் அதிர்விலும்கழிகின்றன”நமது பருவ நிலைக்கு ஒவ்வாத சீருடை களை அணியுமாறு கான்வென்ட் குழந்தை கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அணிந்திருக் கும் சாக்ஸ், ஷூக்கள், பெல்ட் மற்றும் டை ஆகியவை குழந்தைகளுக்கு எரிச்சலை யூட்டி அவர்கள் பாடங்களை கவனிக்கும் ஊக்கத்தினை குலைக்கின்றன.“கல்வி என்பது பக்கெட்டை நிரப்பு வதல்ல. அது ஒரு நெருப்பின் தெறிப்பு” என் கிறார் டபிள்யு. பி. ஈட்ஸ்.உள்ளத்திற்கு ஒளியூட்டுவதும் அத னைப் பண்படுத்துவதும்தான் கல்வியின் உண்மையான இலக்கு. வெறும் புள்ளிவிபரங் களின் குவியல் அல்ல அது. தகவல் திணிப் பின் மூலம் சமகாலத்தில் அடைந்த வெற்றி களையே அப்பள்ளியின் சாதனைகளாகத் தெரிவிக்கின்றனர் என்பது வருத்தத்திற் குரியதாகும். தனித்து இப்பள்ளிகளை மட்டும் ஒருவர் குற்றம்சாட்ட இயலாது.
இதில் பெற் றோர்களுக்கும் பெரும் பங்குண்டு. எந்த வொரு பள்ளி அளவுக்கதிகமாக வேலைப் பளுவினைத் திணித்து, மாணவர்களை அதிக மணிநேரம் சிறையிடுகிறதோ, அப்பள் ளியே மதிப்பு மிகு பள்ளியாக கருதப்படுகிறது. என்ன செய்ய?நமது குழந்தைகள் போட்டி உலகத்தில் இயைந்து செல்லவேண்டும் என படித்த மற் றும் படிக்காத பெற்றோர்களின் கருத்தாக உள் ளது. இப்பள்ளிகள் ஏற்படுத்தும் மிகு மன அழுத்தமும் சொல்லவொண்ணா வெந்துயர மும் குழந்தைகளின் மன வளர்ச்சியைச் சிதைக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால் இந் தியாவின் தூண்களை உருவாக்கவில்லை. மாறாக, முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் ரோபோக்களைத்தான் உருவாக்குகிறோம் என்ற உண்மை நிலையை நாம் உணர வேண்டும். நாம் எப்பொழுதாவது குரலற்ற இந்த இளம் மொட்டுகளின் உணர்வுகளை ஊடுருவிப் பார்த்திருப்பின் அவர்கள் அனு பவிக்கும் தாங்கவொண்ணா அடக்கு முறைகளும் பெரும் துயரங்களும் நம்மை அதிர்ச்சியடைய வைத்திருக்கும்.
அறிவார்ந்த குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மதிப்பின் அடிப்படையிலான கல்வியே காலத்தின் கட்டாயமாகும். நேர்ப்பட வாழுதல், நாணயம், ஆன்மீக நன்னெறி, நடத்தை நெறி முறை, புலனடக்கம், நாட்டுப்பற்று, வன் முறையின்மை ஆகியவையே கல்வியின் தலையாய இயல்புகளாக இருத்தல் வேண் டும். குழந்தைகள் தத்தமது நேரத்தை யோகா, தியானம், நன்னெறி, மதிப்பீடுகள், நயத்தகு நடத்தைகள் மற்றும் விளையாட்டு போன்ற பயன்பாடுகளில் செலவழிக்கும் வகையில் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக இவை இருக்குமாறு நாம் ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும். இவ்வாறான கல்வித் திட்டமே புதுமை நாட்டம், நேர்மை, பெருந்தன்மை, தன் னலமின்மை கொண்ட தலைமுறையை உரு வாக்கும். கூண்டில் அடைக்கப்பட்ட சிற கொடிந்த பறவைககள் அல்ல நமது குழந் தைகள். கண்ணீரும் கம்பலையுமின்றி பள்ளி செல்லும் மற்றும் சுமையற்ற கல்விச்சூழலை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும்.
இந்து ஏட்டில் டாக்டர் வி.சுனிதாஎழுதிய கட்டுரை
தமிழாக்கம் : கோ.வெங்கட்டராமன்

Leave A Reply

%d bloggers like this: