கரூர், பிப்.29-
தமிழக முதல்வரின் விரி வான காப்பீட்டுத் திட்டத் தின் கீழ் கரூர் அப்போலோ மருத்துவமனையில் இரண்டு வெவ்வேறு குறை மாத குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளித்து காப்பற்றப்பட் டன.அப்போலோ மருத்து வமனையின் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் டாக்டர் தினேஷ் பத்திரிகையாளர் களிடம் கூறியதாவது:முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் குறைமாதத்தில் பிறக் கும் குழந்தைகளுக்கு ஏற் படும் பல்வேறு நோய் களுக்கும், கிருமிகள் தாக்கு வதால் ஏற்படும் நோய் களுக்கும், இரத்த ஓட்டம் குறைவு மற்றும் காற்று வயிற்றுக்குள் செல்வதால் ஏற்படும் நோய்களுக்கும், பிறவியிலேயே குழந்தை களுக்கு நுரையீரல், மூச்சு குழல்களில் உருவாகும் கட் டிகளை அறுவை சிகிச்சை யின் மூலம் அகற்றுவதற்கும் இத்திட்டத்தில் சிகிச்சை யளிக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது என்று அவர் கூறினார்.அப்போலோ மருத்து வமனையின் துணைப் பொது மேலாளர் சாமு வேல் கூறுகையில், கரூர் மாவட்டத்திலேயே அப் போலோவில் தான் பச்சி ளங்குழந்தைகளுக்கான பிரிவில் அனைத்து நவீன வசதிகளும் இருப்பதாகவும் மேலும் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட் டத்தின் அங்கீகாரமும் பெற் றிருப்பதால் இதுபோன்ற குழந்தைகளுக்கு இலவச உயர்சிகிச்சையின் மூலம் காப்பாற்ற முடியும் என் பதை பொதுமக்கள் தெரிந்து கொண்டு, அனைவரும் விரி வான காப்பீட்டுத் திட்டத் தையும், அப்போலோவின் உயர் சிகிச்சைகளையும் பயன்படுத்தி கொள்ளு மாறு கேட்டுகொள்கிறேன் என்று அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.