வட அமெரிக்காவில் உள்ள தனது அலுவலகங்களில் பணியாற்றும் ஆயிரம் ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கியுள்ளது பன்னாட்டு கணினி நிறுவனமான ஐபிஎம். கடந்த வாரத்தில் ஒரே நாளில் இந்த பணிநீக்கம் நடந்திருக்கிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஆட்குறைப்பைத் தாண்டி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள அலுவலகங்களில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களைத் திரட்டும் பணி நடந்துவருகிறது.அக்குழுவின்தேசிய ஒருங்கிணைப்பாளரான லீ கான்ரேட், நீக்கப்படும் ஊழியர்கள் குறித்த விபரங்களைச் சேகரித்து, அவர்களோடு தொடர்பு கொண்டு வருகிறோம். நிறுவனத்திலேயே மாற்று வேலைகள் தரப்பட வேண்டும் என்று நாங்கள் நிறுவனத்தை வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

Leave A Reply