சென்னை, பிப்.29-வங்கிக் கொள்ளையர் கள் என்று சந்தேகிக்கப் படும் 5 பேர் சென்னை வேளச்சேரியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்ப வத்தை வானளாவப் புகழ்ந் தும், முறையான விசா ரணை கோருவோரைக் கண்டித்தும் சுவரொட்டி கள் பரவலாக ஒட்டப்பட் டிருப்பதில் காவல்துறை யின் தூண்டுதல் இருக்கக் கூடும் என்று ஐயம் தெரி விக்கப்பட்டுள்ளது.வட மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த 22ந் தேதி அதிகாலையில் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரிந் ததே. தற்காப்புக்காகவே சுட நேர்ந்தது என்று காவல் துறை ஆணையர் திரிபாதி அறிவித்துள்ள நிலையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த உண்மை அறியும் குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மனித உரிமை அமைப்பு களைச் சேர்ந்த பேராசிரியர் கள் அ. மார்க்ஸ், பிரபா. கல்விமணி, கோ. சுகுமாறன், மதுமிதா தத்தா, நிர்மலா கொற்றவை, வழக்கறிஞர் கள் ரஜனி, மனோகரன், சையது அப்துல் காதர், பத்திரிகையாளர் சங்கர ராம சுப்பிரமணியன், எழுத்தா ளர் சந்திரா ஆகியோர் இக் குழுவில் இடம் பெற்றிருந் தனர். சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் ஆணை யர் தெரிவித்த கருத்துகளுக் கும், மக்கள் தெரிவித்த தக வல்களுக்கும் இடையே பல முரண்பாடுகள் இருப்பதாக குழுவின் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. நள்ளிர வில்தான் தகவல் அறிந்து குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதாக ஆணையர் கூறி யுள்ளார். ஆனால் இரவு 10.30 மணியளவிலேயே காவல் துறையினர் வந்துவிட்ட தாகவும், கதவுகளை மூடி விளக்குகளை அணைக்கு மாறு எச்சரித்ததாகவும் பொதுமக்கள் கூறியுள்ள னர். இப்படிப்பட்ட முரண் பாடுகள் பற்றி கேட்ட போது, நீதிபதி விசாரணை உள்ள நிலையில் பதில் கூற இயலாது என்று கூறினார். மற்ற கேள்விகளுக்கு விரி வாக பதிலளித்த அவர் இந்த கேள்விக்கு மட்டும் நீதிபதி விசாரணையைக் காரண மாகக் கூறி பதிலளிக்க மறுத் திருப்பது அவரிடம் இதற்கு பதில் இல்லை என்பதையே காட்டுகிறது என்று அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த வீட் டில் துப்பாக்கிச் சண்டை நடந்ததற்கான அடையா ளங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு இல்லை. நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்த சத்தம் கேட்டதாக பொதுமக்கள் சொல்ல வில்லை. கொல்லப்பட்ட வர்கள் தங்கியிருந்த வீட்டு வசதிவாரிய வீடு ஒற்றைப் படுக்கையறை கொண்டதே யாகும். கிட்டத்தட்ட ஒரு பொந்தில் அடைபட்ட எலி களைப்போல இருந்த அந்த ஐவரையும் காவல்துறை யினர் முற்றுகையிட்டு, தேவைப்பட்டால் ஓரிரு நாட்கள் முற்றுகையை நீடித்து உயிருடன் பிடித் திருக்க முடியும். அதிரடிப் படையைக் கொண்டு ஒரு சிலரையாவது பிடித்திருக்க முடியும். அப்படி உயிருடன் பிடித்திருந்தால் பல உண் மைகள் மக்களுக்கு தெரிய வந்திருக்கும். மோதல் நடப்பதற்கு முதல்நாள் காவல்துறை அதிகாரிகள், பீகாரைச் சேர்ந்த கும்பல்தான் வங்கி களில் கொள்ளையடித் திருக்கிறது என தெரிவித்த தாக ஒரு ஆங்கில நாளேட் டில் செய்தி வந்துள்ளது. இந்த உண்மை தெரியவந்த தன் விளைவாகவே காவல் துறை விரைவாக துப்புத் துலக்க முடிந்திருக்கிறது.
ஏற்கெனவே மஹாராஷ்டிர மாநில காவல்துறையினர் இதேபோன்று சந்தேகத் திற்குரியவர்களை சுட்டுக் கொல்லாமல், கைதுசெய்து முறையாக விசாரித்ததால் தான் இந்த தகவல்கள் இன்று பயன்படுகின்றன. எனவே, யாரையோ திருப்திப்படுத்து வதற்காக அல்லது ஒரு அதி ரடி சாதனையைச் செய்து தமிழகத்தைப் பாதித்துக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புவதற்காகவே இந்த மோதல் படுகொலைகள் நடத்தப்பட்டதாகக் கருத வேண்டியிருக்கிறது. இத னால் தமிழக காவல்துறை பல அரிய உண்மைகளை பெறத் தவறியிருக்கிறது என்று அறிக்கையில் கூறப் பட்டிருக்கிறது.கைது செய்யப்பட வேண் டியவர்கள் மரண தண் டனை அல்லது ஆயுள் தண் டனைக்குரிய அளவுக்கு மட்டுமே குற்றங்களைச் செய்திருந்தால் மட்டுமே அவர்களை, தற்காப்பு கருதி கொல்லலாம் என அரச மைப்பு சாசன தண்டனைச் சட்ட 46.3 பிரிவு கூறுகிறது. இந்த வழக்கில் கொல்லப் பட்டவர்கள் சந்தேகத்திற் குரியவர்களே.
அவர்கள் ஐவரையும் கொன்றது சட்ட ரீதியில் ஏற்புடையது அல்ல. அவ்வாறு கொலை நிக ழும்போது அது கொலை வழக்காகவே பதிவு செய்யப் பட வேண்டும். கொலை யைச் செய்தவர் இந்திய சாட்சிய சட்டத்தின்படி (105) தற்காப்பிற்காகவே அவ்வாறு செய்ய நேர்ந்தது என்பதை நீதிமன்றத்தில் நிறுவ வேண்டும். போலி மோதல் கொலைகளில் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்க லாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதையும் குழுவி னர் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவங்கள் தொடர் பாக தமிழக அரசின் காவல் துறை பிரிவு விசாரணை மூலம் உண்மை வெளி வராது. எனவே மத்திய புலனாய்வு கழகம் (சிபிஐ) விசாரணை தேவை. செய லின் கடுமை கருதி பணி, தற்போது பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் நீதிவிசா ரணை தேவை. ஆணையர், இணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட 14 பேர் கொண்ட ‘என்கவுன்ட் டர்’ குழு மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்த அதிகாரி களுக்கு வீரப்பரிசும் ஊக்கப் பதவி உயர்வும் வழங்கப்படக் கூடாது என்று குழுவினர் கோரியுள்ளனர்.உலகமயச் சூழலில் மாநி லம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து பிழைக்கச் செல் வது அதிகரித்து வரும் நிலை யில், வட மாநிலங்களி லிருந்து தமிழகத்திற்கு வந்து பல்வேறு வேலைகளில் ஈடு பட்டு கடுமையான சுரண்ட லுக்கு உள்ளாகி வருவோர் அனைவரையும் குற்றப் பரம்பரையினர்போல நடத் துவது முறையல்ல. பல் வேறு பகுதிகளில் இத்த கைய தொழிலாளர்கள் காவல் நிலையங்களுக்கு கைரேகைப் பதிவு உள்ளிட்ட சோதனைகளில் ஈடுபடுத் தப்படுகிறார்கள். தமிழகத் தைச் சேர்ந்த பலரும் மற்ற மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு ஊடகங்களும், சில அமைப்பு களும் கூட வட மாநிலத்த வர் மீது இனவெறுப்பு ஏற் படும் வகையில் எழுது வதை அரசியல் தலைவர் கள் கண்டிக்க வேண்டும் என்றும் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.பொதுமக்களிடையே விசாரணை நடத்தச் சென்ற போது ஒரு கும்பல் குழுவி னரை அவதூறாக பேசி தாக்க முயன்றது. குழுவின ரிடம் காவலர்கள் இணக்க மாகவே பேசினார்கள் என் றாலும், கும்பலை அகற்ற முயலவில்லை. இத்தகைய உண்மையறியும் குழுக்க ளின் பணிகளை தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத் தின் மதுரை கிளை கூறி யிருப்பதையும் குழுவினர் நினைவுகூர்ந்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.