ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் உருக்கு பொருள்களின் உற்பத்தி 5.84 கோடி டன்களாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் உருக்கு உற்பத்தி 5.45 கோடி டன்களாக இருந்தது. இதன் மூலம் இந்நிதியாண்டில் உருக்கு உற்பத்தி 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதேபோல், உருக்கு பயன்பாடும் 5.5 சதவிகிதம் அதிகரித்து 5.42 கோடி டன்னிலிருந்து 5.72 கோடி டன்னாக உள்ளது.
கணக்கீடு செய்வதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட காலகட்டத்தில், உருக்கு ஏற்றுமதி அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. அதாவது, 25 சதவிகித அளவிற்கு வளர்ச்சிகண்டு 27.60 லட்சம் டன்னிலிருந்து 34.50 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. அதேபோல், இறக்குமதி 0.6 சதவிகிதம் குறைந்து 56.20 லட்சம் டன்னிலிருந்து 55.90 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இவ்வாறு உருக்குத்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: