வாஷிங்டன், பிப்.29-
யுரேனியம் செறிவூட்டலை ஈரான் விரைவுபடுத்துகிறது என்று ஐ.நா. வின் கண்காணிப்பு அமைப்பில் சந்தேகக் கண்களால் பார்க்கப்பட்டாலும், அந்நாட்டில் அணுகுண்டு தயாரிக்கும் திட்டம் இல்லை என்று அமெரிக்க ஆய்வறிக்கை கூறுகிறது.
ஏற்கெனவே 2007 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் 16 உளவு நிறுவனங் கள் ஆய்வொன்றை மேற்கொண்டன. அதில் பல ஆண்டுகளுக்கு முன்பா கவே அணுகுண்டு தயாரிக்கும் திட் டத்தை ஈரான் விட்டு விட்டதாகத் தெரியவந்தது. இந்நிலையில் உளவு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு விபரங்கள் நியூயார்க் டைம்ஸ் நாளித ழில் வெளியாகியுள்ளது.2003 ஆம் ஆண்டிலேயே ஈரானின் அணுகுண்டுத்திட்டம் கைவிடப்பட் டது என்பது சிஐஏ உள்ளிட்ட அமெ ரிக்க உளவு நிறுவனங்களின் மதிப் பீடாகும்.
ஆனால் அரசியல் ரீதியாக ஈரானை மிரட்டுவதற்காக, அணு குண்டு பீதியை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கிளப்பி விட் டுள்ளன. தனது அணுசக்தித்திட்டம் ஆக்க பூர்வமான பணிகளுக்காகவே நடத்தப் படுகிறது என்று ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்று கூறி போர்தொடுத்து அதை அமெரிக்கா ஆக்கிரமித்தது. இன்று வரை அங்கு பேரழிவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது போன்றதொரு பொய்ப்பிரச்சாரம் தான் ஈரான் பற்றியும் வலம் வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: