இன்று இந்திய விவசாயம் கடுமை யான பிரச்சனைகளைச் சந்தித்து வரு கிறது. அறுவடைக்குப் பின் எதிர்பார்த்த விளைச்சலைப் பெறுவதும் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை யைச் சந்தையில் பெறுவதும் விவசாயி களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் முக்கிய இரு பிரச்சனைகள். தண்ணீர், இடுபொருட்கள், மின்சாரம் ஆகியவற் றைப் பெற அவர்கள் அன்றாடம் போராட வேண்டிய நிலையில்தான் உள்ளனர்.
இப்பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒளிக் கீற்றாக வந்துள்ளன இயற்கை இடு பொருட்கள். “இயற்கை இடுபொருட் களைப் பயன்படுத்தினால் எந்தப் பயிருக் கும் குறைந்த செலவில் விளைச்சலைப் பெருக்க முடியும். சுற்றுப்புறத்திற்கும் கேடு வராமல் காக்க முடியும்” என்கிறார் தஞ்சையிலுள்ள டாரி பயோடெக் உரிமை யாளரும் இயற்கை வேளாண்மை ஆர்வல ருமான திரு ஆர். குழந்தைசாமி.“என்னுடைய கண்டுபிடிப்புகள் ஏட்டுச் சுரைக்காய் அல்ல, நடைமுறை அனுபவத்தில் கிடைத்தவை. மன்னார் குடியைச் சேர்ந்த தமிழ்நாடு காவேரி டெல்டா விவசாயிகள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு எஸ். ரங்கநாதன் தன்னுடைய 30 ஏக்கர் நிலத்தை என் னுடைய பரிசோதனைக்குத் தர முன் வந்தார்.
அவருடைய நிலத்தில் நெல் சாகு படிக்கு என்னுடைய இயற்கை இடு பொருட்களைப் பயன்படுத்தியதில் ஒரு ஏக்கருக்கு இரண்டு டன்களுக்கு மேல் விளைச்சலைப் பெற முடிந்தது. அறு வடையின் போது பல விவசாயிகள், மாவட்ட அதிகாரிகள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆகி யோரை அழைத்து, இதை அவர்கள் கண் முன் நிரூபித்தோம்” என்கிறார் குழந்தை சாமி.இயற்கை இடுபொருட்களை மட்டும் பயன்படுத்தி எப்படி விளைச்சலைப் பெருக்க முடிந்தது என்று விஞ்ஞானிகள் அதிசயித்தனர்.
விவசாயிகளோ எத்தனை சாக்கு மூட்டைகள் நிரப்பப்பட்டன என கணக்கெடுப்பதில் ஆழ்ந்துவிட்டனர். அமோக விளைச்சலைப் பார்த்து மகிழ்ச் சியடைந்தனர்.“இதுவரை, பல ஆண்டுகளாக ஒரு ஏக்கருக்கு ஒன்றிலிருந்து ஒன்றே முக் கால் டன்களை மட்டுமே என்னால் அறுவடை செய்ய முடிந்திருக்கிறது. ஆனால் திரு குழந்தைசாமி அளித்த இடு பொருட்களைப் பயன்படுத்தியதில் ஒரு ஏக்கருக்கு 2.43 டன்கள் அறுவடையை நான் பெற முடிந்தது. வழக்கமாகப் பெறு வதைவிட இது சுமார் 400 கிலோகிராம் அதிகம்.. சாகுபடிச் செலவும் குறைந்து விட்டது. பாரம்பரியமான விவசாயி என்ற முறையில் இயற்கை வேளாண்மையைப் பற்றி நான் அதிகமாக கண்டுகொள்ள வில்லை.
இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி ஊடகங்கள் செய்த பிரச்சாரமே என்னிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி யது… ஆனாலும் நிலவளமும் மாடுகள் எண்ணிக்கையும் குறைந்து வரும் காலத் தில் தேசம் முழுமைக்கும் இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்க முடியுமாவென்ற சந்தேகம் இன்னமும் எனக்கு இருக் கிறது.. மற்றபடி தனிப்பட்ட முறையில் வரும் ஆண்டுகளில் என்னுடைய நிலத் தில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக நல்ல விளைச்சலைப் பெற முடியுமாவென்பதைப் பரிசோதித்துப் பார்க்க இருக்கிறேன். வேதியியல் இடு பொருட்களைப் பயன்படுத்தினால் விளைச்சலைப் பெருக்க முடிந்தாலும் உடல்நலத்தைப் பராமரிக்க உதவுவது இயற்கை இடுபொருட்களே என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டிருக் கிறேன்” என்று கூறுகிறார் ரங்கநாதன்.
அறுவடை சமயத்தில் வந்து விளைச் சலைப் பார்த்துத் தெளிவடைந்த பல விவ சாயிகள் மாநிலத்தின் பிற பகுதிகளில் இயற்கை வேளாண் முறைகளைப் பிர பலமாக்க அரசு முயற்சிகள் எடுக்க வேண் டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.“இன்று ஒரு ஏக்கரில் வேதியியல் இடுபொருட்களைப் பயன்படுத்தி விளை விக்க இடுபொருட்களுக்கு மட்டும் 2500 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை நான் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆட்கள் பற்றாக்குறை, விளைபொருட்களுக்குக் கிடைக்கும் குறைவான விலை இரண் டையும் சேர்த்துப் பார்த்தால் எனக்கென எதுவுமே மிஞ்சாத நிலையே இருக்கும்.
ஆனால் திரு குழந்தைசாமி தரும் இடு பொருட்களைப் பயன்படுத்தினால் ஒரு ஏக்கருக்கான இடுபொருள் செலவு 800 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் மட்டுமே என்பதால் வேளாண் செலவில் நான் மிச்சம் பார்க்க முடியும்” என்கிறார் திருக் காட்டுப்பள்ளி விவசாயி திரு கணேசன். தன்னுடைய பண்ணையை வந்து பார்க் குமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக் கிறார் திரு குழந்தைசாமி.
தொடர்புக்கு : (இணையதளம் : www.tarigroup.com
அலைபேசி : 98430 59117)ஆதாரம் : ‘தி இந்து’வில்திரு எம்.ஜெ. பிரபு எழுதிய கட்டுரை

Leave a Reply

You must be logged in to post a comment.