உலகின் பல நாடுகளைச் சீரழித்த உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப்(பன்னாட்டு நிதியம்) ஆகிய இரண்டு அமைப்புக ளிலும் எங்களுக்கு உரிய பங்கு வேண்டும் என்று பிரிக்ஸ்(பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்பு) வலியுறுத் தியிருக்கிறது. மெக்சிகோவின் தலைந கர் மெக்சிகோ சிட்டியில் பன் னாட்டு நிதி நிறுவனங்களின் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், பிரேசில் ஜனாதிபதி டில்மா ரூசெப், தென் ஆப்பிரிக்காவின் ஜனா திபதி ஜேக்கப் சுமா, சீன ஜனா திபதி ஹு ஜிண்டாவோ மற் றும் ரஷ்யாவின் டிமிட்ரி மெட்வதேவ் ஆகியோர் தனியா கக் கூட்டமொன்றையும் நடத்தியிருக்கிறார்கள். அந் தக் கூட்டத்தில், வளரும் நாடுகளுக்கு பன்னாட்டு நிதி நிறுவனங்களில் போதியபங்கேற்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். இந்த அமைப்புக ளுக்குத் தலைவர்களைத் தேர்வு செய்யும்போது அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என் பது தீர்மானிக்காமல், அவர்கள் எப்படி செயலாற்றுவார்கள் என்பதைப் பொறுத்தே தீர்மா னிக்க வேண்டும் என்று அனைவரும் கருத்து தெரிவித்த னர்.
உலக வங்கியின் தற்போ தைய தலைவரான ராபர்ட் சோலிக் பதவிக்காலம் நிறைவு பெறவுள்ளது. 2007 ஆம் ஆண் டில் அவர் பொறுப்பேற்றார். புதிய தலைவருக்கான தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடக்கும். மார்ச் 23 ஆம் தேதிக்குள் வேட்பாளர்களின் பெயர்களை நாடுகள் அறி விக்க வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் தங்களின் வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்துக் கருத்து தெரிவித்த தென் ஆப்பிரிக்க நிதியமைச்சர் பிரவீண் கோர்தான், இரண்டு பொறுப்புகளையும் அமெ ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடு களே பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தை தகர்க்க வேண்டும். வளரும் நாடுகள் தங்களுக்குள் ஒரு பொதுக்கருத்தை எட்ட வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.
பிரிக்ஸ் அதிகாரிகளில் ஒருவர் தெரிவிக்கையில், அமெரிக்க அரசு யாரை வேட் பாளராக நிறுத்தினாலும், பொதுக்கருத்து எழாத நிலை யில்கூட சொந்த வேட்பாளரை நிறுத்த பிரிக்ஸ் தயங்காது என்று குறிப்பிட்டார்.அமெரிக்காவைப் பொறுத்தவரை, தற்போதைய தலைவரான சோலிக் ஜூன் மாதத்தில் இப்பதவியிலிருந்து விலகுகிறார்.
மற்றொரு ஐந் தாண்டு காலம் தனது பதவியை நீட்டித்துக் கொள்ள அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை. தங்கள் அரசின் சார்பில் வேட் பாளரை நிறுத்துவோம் என்று அமெரிக்கா கூறியிருந்தாலும், இதுவரை யாருடைய பெயரையும் அறிவிக்கவில்லை. அமெரிக்க நிதிச் செயலாளர் லாரன்ஸ் சம்மர்ஸ், வெளியுற வுத்துறை செயலாளர் ஹில் லாரி கிளிண்டன் மற்றும் ஐ.நா. வுக்கான அமெரிக்கத் தூதர் சூசன் ரைஸ் ஆகியோரின் பெயர் அடிபடுகின்றன. இந் தப் பதவியை ஏற்கத் தயாரில்லை என்று ஹில்லாரி அறிவித்துள் ளார். வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு கடன் தந்து அந்நா டுகளைத் தங்கள் வலைக்குள் சிக்க வைக்கும் வேலையை நேர்த் தியாகச் செய்யும் ஒருவரை அமெரிக்கா தேடிவருகிறது. தங்கள் நாட்டைச் சேர்ந்த வர்தான் தலைவராக இருப்பார் என்று கடந்த வாரமே ஒபாமா நிர்வாகம் தெரிவித்தது.
நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான விக்டோரியா நுலாந்து, உலக வங்கியின் தலைமைப் பொறுப்பைப் பொறுத்தவரை, ஒரு வலுவான அமெரிக்க வேட் பாளர் களத்தில் இருப்பார். அப் பொறுப்பை வேறு யாருக்கும் விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று குறிப்பிட்டார். இதுபற்றி ஐரோப்பிய நாடுகளிடமிருந்து மாற்றுக் கருத்து எதுவும் வரவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, ஐ.எம்.எப். தலைவர் பதவி இருப்பதால், அமெரிக்காவுக்கு சாதகமாக முழுமையாக நிற்பார்கள். இந்நிலையில்தான் பிரிக்ஸ் அமைப்பு எடுத்துள்ள முடிவு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய இரண்டு நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நிலையான பொரு ளாதாரத்தைக் கொண்டு நாடுகளின் பிரதிநிதிகள் இந்த நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது வளரும் நாடுகளின் கருத்தாகும்.
கடந்த 60 ஆண்டுக ளுக்கும் மேலாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, ஏராளமான நாடுகளின் பொரு ளாதாரங்கள் தங்களைச் சார்ந்து இருக்கும் வகையில் செய்ததை விட்டுக் கொடுக்க அமெரிக்காவிற்கு மனமில்லை. ஆனால் தொடர்ந்து வளரும் நாடுகளிலிருந்து தரப்படும் நிர்ப்பந்தம் அதிகரித்துள்ளது. ஆக்கபூர்வமான நிலையைநோக்கி நகர நாங் கள் விரும்பு கிறோம். அமெ ரிக்காவோ அழிவுபூர்வமான நிலையை நோக்கி நகருகிறது என்று விமர் சிக்கிறார் கோர் தன்.

Leave a Reply

You must be logged in to post a comment.