நாக்பூர், பிப். 29-
ஆசிரியரும் ஒரு ஊழியர். அவருக்கு பணிக்கொடை பலன்கள் பெறுவதற்கு உரிமை உள்ளது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பணிக்கொடை உரிமையை கல்லூரி நிர்வாகம் எதிர்த்த நிலையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை கூறியுள்ளது.விதர்பா இளைஞர் நலவாழ்வு கல்வி நிறுவனத்தில் (சொசைட்டி) ஆசிரியராக பிரதீப் குமார் லாம்பதே பணி யாற்றினார்.
ஓய்வுக்குப் பின்னர் அவருக்கு ரூ.3.5 லட்சம் பணிக்கொடை அளிக்க வேண்டுமென, அமராவதி உதவி தொழிலாளர் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து கல்லூரி நிர்வாகம், மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இம்மனுவை விசாரித்த நீதி மன்றம் 1972ம் ஆண்டு பணிக்கொடைச்சட்டம் 2(இ) விதியின்படி ஆசிரியரும் ஒரு ஊழியர் ஆவார்.
எனவே அவருக்கு பணிக் கொடை பலன்கள் பெறத் தகுதி உள்ளது. பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு ரூ.3.5 லட்சம் பணிக்கொடையை ரூ.1.2 லட் சம் வட்டியுடன் அளிக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தர விட்டு, கல்லூரி நிர்வாக மனுவை தள்ளுபடி செய்தது. இதைத்தவிர ஆண்டுக்கு 10 சதவீத வட்டி அடிப்படையில் மேலும் ரூ.27 ஆயிரத்து 872-ஐ கல்லூரி மனுதாரர் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.