தனக்கு எதிராக அவதூறு செய்தியை வெளியிட்டதற் காக மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தித்தாள் உரிமையாளர்கள் மூன்று பேருக்கும் ஈக்குவடார் ஜனாதிபதி ரபேல் கோரியா மன்னிப்பு வழங்கியுள்ளார். செப்டம்பர் 2010ல் இடதுசாரி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் தூண்டி விடப்பட்ட கலகம் நடந்தது. காவல் துறை அதிகாரிகளில் ஒரு சிலர் அரசுக்கு எதிராகக் கிளம்பினர். அவர்களை ராணுவத்தின் உதவியால் ரபோல் கோரியா தலைமையிலான அரசு கட்டுப்படுத்தியது.
அப்போது அங்கிருந்த அப்பாவி மக்களின் உயிர் போனாலும் பரவாயில்லை என்று காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ரபேல் கோரியா உத்தரவிட்டார் என்று எல்யுனிவர்சோ பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதை எதிர்த்து முன்னாள் பத்திரிகை உரி மையாளர்கள் மற்றும் எழுத்தாளர் எமிலியோ மீது அவ தூறு வழக்கு தொடரப்பட்டது. பொய்யான செய்தியை வெளியிட்டார்கள் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப் பட்டது. எல்யுனிவர்சோ உரிமையாளர்கள் கார்லோஸ், சீசர் நிகோலஸ் மற்றும் எழுத்தாளர் எமிலியோ ஆகியோருக்கு தலா மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
மேலும் 20 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப் பட்டது. இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த சமயத்தில் கோரியாவை “சர்வாதிகாரி” என்றும் அப்பத்திரிகை விமர்சித்தது. “இந்நிலையில் இவர்களுக்கு மன்னிப்பு வழங்க முடிவு செய்துள்ளேன். தண்டனை வழங்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல” என்று தொலைக்காட்சியில் உரை யாற்றுகையில் கோரியா தெரிவித்தார். தண்டனை ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply