உலகத்தை உள்ளங்கைகளுக் குள் கொண்டு வந்துவிட்ட அழ கான விஞ்ஞான குழந்தை. எந்த இடத்தில் இருந்தபடியும் தொலை வில் இருக்கும் நபர்களை தொடர்பு கொள்ள உதவுவதன் மூலம் காலம் மற்றும் பணவிரயத்தை தவிர்க்க செல்போன் மிகவும் உதவியாக இருக்கிறது என்றால் அது மிகை யல்ல.
இன்றைய சூழலில் பலர் செல்போனுக்கு அடிமையாகவே மாறிவிட்டனர். உலக சந்தையில் இந்தியாதான் செல்போன் பயன் பாட்டில் வேகமாக வளர்ந்துவரு கிறது. “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சி னால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் திடுக் கிடும் தகவலை வெளியிட்டுள் ளனர்.உலக சுகாதார அமைப்பின் ஒரு அங்கமான சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வின் படி, செல்போன்களில் தொடர்ச்சி யாக பேசுபவர்களுக்கு மூளையில் புற்றுநோய் கட்டி உருவாகும் அபா யம் உள்ளது. மேலும் செவிகளில் உள்ள நரம்பு மண்டலம் பாதிக்கப் பட்டு காது கேட்கும் திறன் குறை வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுடநஉவசைடி ஆயபநேவiஉ குநைடன எனப்படும் மின்காந்த தளம்தான் இத்தகைய பாதிப்பு ஏற்பட காரணம் என்று தெரிய வந்துள்ளது.
செல்போனில் அதிக நேரம் தொடர்ச்சியாக பேசு கையில், மிருதுவான காது வழியாக மூளையை மின்காந்த அலைகள் எளிதில் தாக்கக் கூடிய அபாயம் உள்ளது.செல்போன் கோபுரங்களைச் சுற்றி சுமார் 300மீ சுற்றளவில் வசிப் பவர்களுக்கு கூட பாதிப்புகள் உள் ளன. புற்றுநோய் தொடர்பான விஷ யங்கள் இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கதிர்வீச்சு ஆபத்து கிடையாது என்று யாராலும் அடித்துச் சொல்ல முடியாது. பல பறவை இனங்கள் கதிர்வீச்சால் சிறிது சிறிதாக அழிந்து வருவதாகவும் ஒரு ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் தலை வலி, தூக்கமின்மை, ஞாபகமறதி, சோர்வு, மூட்டுவலி, மரபணு பாதிப்பு ஏற்படும் என்றும், தாய்மை காலங்களில் பெண்கள் செல் போனை பயன்படுத்தினால் கரு வில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் மற்றொரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது.செல்போன் மட்டுமல்லாது மேலும் பல நவீன சாதனங்களும் கதிர்வீச்சை வெளிப்படுத்துகின் றன.
ஜெராக்ஸ், கம்ப்யூட்டர், ஃபேக்ஸ் மற்றும் பிற கருவிகளின் அருகில் பணிபுரிபவர்களும் இத்தகைய கதிர்வீச்சுக்கு அதிகமாக ஆளா கிறார்கள் என்கிறது ஒரு அதிர்ச்சி தகவல். புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான பொருட் களில் குரூப்-1 ரகத்தில் சிகரெட் புகையிலை போன்ற பொருட்கள் இடம்பெற்றுள்ளன. குரூப் -2 எனப் படும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ள குளோரோபார்ம், பெட்ரோலிய பொருட்களின் வரிசையில் தற் போது செல்போனும் இடம் பெற்று விட்டது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, உலக சுகாதார அமைப்பின் அறிக்கை குறித்து அச் சப்படத் தேவையில்லை என்றும் ஒரு ஆறுதல் செய்தி உள்ளது என் றாலும், செல்போனில் அதிகமாக பேசுவதைத் தவிர்த்து அத்தியா வசிய தேவைகளுக்கு மட்டுமே உபயோகப்படுத்தினால் செல் போன் நமக்கு கிடைத்த வரப்பிர சாதம்தான்.
நன்றி: சங்கக்குரல் (தஞ்சை)

Leave a Reply

You must be logged in to post a comment.