அறந்தாங்கி, பிப். 29-
அனைத்து தொழிற்சங்கங் கள், வங்கி, இன்சூரன்ஸ், தொலைத் தொடர்பு, பாதுகாப்பு, அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள், பொதுத் துறை ஊழியர்கள் என தொழில் வாரி சம்மேளனங்கள் 28 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரி வித்து செவ்வாய்க்கிழமை மாலை அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன்டியுசி மாவட்டத்தலை வர் பெருமாள் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.செல்வராஜ், மா.முத் துராமலிங்கன், எஸ்.கவிவர் மன், ஏ.பாலசுப்பிரமணியன், சி.சுப்பிரமணியன், எஸ்.பாண் டியன், அலெக்ஸ்பாண்டியன், சாத்தகுமார் சிஐடியு போக்கு வரத்து இளங்கோ, நாச்சியப் பன், ஏஐடியுசி மாவட்டச் செய லாளர் சிங்கமுத்து, மாதவன், ராஜேந்திரன், ஜெயபால், பவுல் ராஜ், அறந்தை துரை, பெரிய சாமி, நாடிமுத்து மற்றும் ஐஎன் டியுசி உள்பட பல தொழிற்சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: