திருநெல்வேலி, பிப்.29-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் மற்றும் வாரிசுதாரர் நல அமைப்பின் செங்கோட்டை புளியங்குடி, சங்கரன்கோவில் பணி மனைகள் இணைந்த கூட்டம் 27ம் தேதி கே. இராமையா பாண்டியன் தலைமையில் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். பத்மநாபன், பி.மனோகரன், மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.தேவராஜ் ஆகியோர் பேசி னர்.கூட்டத்தில் நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பணி ஓய்வு அன்று அனைத்து பணப்பலன்களை வழங்கிட வேண்டும், பென்சனை அரசே ஏற்று நடத் திட வேண்டும், பென்சன் டிரஸ்டிற்கு தொழிலாளி யிடம் பிடித்த பணத்தை உடனடியாக வழங்கிட வேண்டும், டி.ஏ. உயர்வும், நிலுவைத் தொகையும் உட னடியாக வழங்கிட வேண்டும். 2003 முதல் ஒப்பந்த பணபலன்களை வழங்கிட வேண்டும். புறநகர் பேருந் தில் பயணம் செய்ய பாஸ் வழங்கிட, விதவைகளுக் கும் பாஸ் வழங்கிட வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்கிட வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: