சென்னை, பிப். 28-இலங்கை கடற்படையி னரால் கைது செய்யப் பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரும் இலங்கை நீதிமன்றத் தால் விடுவிக்கப்பட்டு, புதனன்று (பிப்.29) தமிழகம் அழைத்து வரப்பட உள்ளனர்.பிப்ரவரி25அன்றுஇராம நாதபுரம் மாவட்டம், இரா மேஸ்வரம் மீன்பிடித் தள த்திலிருந்து,மீன்பிடிவிசைப் படகுகளில் தமிழக மீனவர் கள் மீன்பிடிக்கச் சென்றனர். பிப்ரவரி 26 அன்று கச்சச் தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 22 தமிழக மீனவர்களை, அவர்களது 5 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்து, இலங்கையிலுள்ள தலை மன்னாருக்கு கொண்டு சென்றதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றன.இதனையடுத்து, முதல மைச்சர் உத்தரவின்பேரில் கொழும்பு மற்றும் யாழ்ப் பாணத்தில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகி, கைது செய்யப்பட்ட 22 மீன வர்களையும், அவர்களின் 5 படகுகளையும் உடனடி யாக விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக் கப்பட்டது. இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதி காரிகள் மூலமாக தமிழ்நாடு அரசு விடுத்த வேண்டு கோளினை ஏற்று, தலை மன்னார் நீதிமன்றம் 27.2.2012 அன்று 22 மீனவர் களையும், அவர்க ளின் 5 படகுகளையும் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் விடுவித் தது. 5 படகுகள் உட்பட விடுவிக்கப்பட்ட 22 மீனவர் களும் இலங்கை கடற்படை யினரிடம் ஒப்படைக்கப் பட்ட பின்னர், அவர்களை இந்தியக் கடலோரக் காவல் படை புதனன்று (பிப். 29) தமிழகம் அழைத்து வரும்.

Leave a Reply

You must be logged in to post a comment.