புதுதில்லி, பிப். 28-
நவீன தாராளமயக் கொள்கை களை மேலும் மேலும் தீவிரமாக அம லாக்கி வரும் காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசுக்கு பிப்ரவரி 28ம் தேதி வர லாறு காணாத வேலை நிறுத்தத்தின் மூலமாக இந்தியத் தொழிலாளி வர்க்கம் கடும் எச்சரிக்கை விடுத் தது. கட்சி வேறுபாடின்றி, சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் இந்த மகத்தான வேலைநிறுத்தத்தில் பங் கெடுத்தனர்.
அனைத்து மத்திய தொழிற்சங் கங்களும் கூட்டாக விடுத்த அழைப் பை ஏற்று நாடு முழுவதிலும் 10 கோடிக்கும் அதிகமான தொழிலாளர் கள் இந்தப் பொது வேலைநிறுத்தத் தில் முழுமையாக பங்கேற்றனர். ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, பிஎம் எஸ், எச்எம்எஸ், ஏஐயுடியுசி, ஏஐசி சிடியு, யுடியுசி, டியுசிசி, தொமுச, சேவா ஆகிய மத்திய தொழிற்சங்கங் களும் பல்வேறு மாநிலங்களில் இயங்கும் பிராந்திய தொழிற்சங்கங் களும் ஒன்றுபட்டு இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தின.
தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக, முதலாளித்துவத்தின் தாக்கு தல்களுக்கு எதிராக உலகெங்கிலும் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங் கள் உச்சத்தை எட்டிவரும் நிலை யில், இந்தியாவிலும் வரலாற்றில் முதல்முறையாக அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு நின்று, தொழிலாளர் உரிமைகளுக் காக உரத்து முழக்கமிட்டுள்ளன.
இந்திய பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும், குறிப் பாக நிலக்கரி, இரும்பு, பெட்ரோ லியம், தொலைதொடர்பு, பாதுகாப்பு, வங்கிகள், இன்சூரன்ஸ், மின்சாரம், போக்குவரத்து, துறைமுகம், ஏற்று மதி-இறக்குமதி, அங்கன்வாடி, கட்டு மானம், செங்கல்சூளைகள், பீடித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான துறைக ளைச் சேர்ந்த கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் என 10 கோடிக்கும் அதிகமான உழைக்கும் மக்கள் இந்த மகத்தான வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்று வெற்றிபெறச் செய்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தத்திற்காக கடந்த 2011 டிசம்பர் 2ம் தேதி மத்திய அரசுக்கு அனைத்து தொழிற்சங்கங் களும் கூட்டாக வேலைநிறுத்த நோட் டீஸ் அளித்தன. எனினும், தொழிலா ளர் நலனைப் பற்றி இந்த அரசு கிஞ் சிற்றும் கவலைகொள்ளவில்லை. இந்நிலையில், தங்களது கடும் எதிர்ப் பை இந்த வேலைநிறுத்தத்தின் மூல மாக தொழிலாளர்கள் வெளிப்படுத்தி யுள்ளனர் என்றும், தொழிற்சங்கங் களின் அழைப்பை ஏற்று முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்துதரப்பு தொழிலாளர்கள், மத்தியதர வர்க்க ஊழியர்கள் அனைவருக்கும், ஆதரவு தெரி வித்த அனைத்துப்பகுதி மக்களுக் கும் இந்தியதொழிற்சங்க மையம் (சிஐடியு)வின் அகில இந்தியத் தலை வர் ஏ.கே.பத்மநாபன், பொதுச்செய லாளர் தபன்சென் எம்.பி., மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர் கள் சஞ்சீவ ரெட்டி எம்.பி., குருதாஸ் தாஸ் குப்தா எம்.பி., பி.என்.ராய், ஆர்.என்.மித்தல், கிருஷ்ணசக்ர வர்த்தி, அபானிராய், எஸ்.பி.திவாரி, செ.குப்புசாமி உள்ளிட்டோர் பாராட்டு தலும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.
இந்த மகத்தான வேலைநிறுத்தப் போராட்டம் விலைவாசி உயர்வை கண்டித்தும், பொதுவினியோக முறையை விரிவுப்படுத்தவும், தொழி லாளர் சட்டங்களை கறாராக அம லாக்கவும், முறைசாரா தொழிலாள ருக்கான சமூக பாதுகாப்புக்கான நிதி யம் உருவாக்கவும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் என தீர்மா னிக்கவும், புதிய பென்சன் திட்டத்தை கைவிடவும், போனஸ், பணிக் கொடை போன்ற பணப்பயன்களுக் கான வருமான வரம்புகளை நீக் கவும், உலகதொழிலாளர் ஸ்தாப னத்தின் இணக்க விதிகளான தொழிற்சங்க உரிமை, கூட்டுபேர உரிமையை நிலைநிறுத்தவும் வலி யுறுத்தி முழக்கமிட்டது.

Leave A Reply