பெங்களூர், பிப். 28-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டச்செயல்பாட்டில், சீரியமுறை தேவை உள்பட, விவசாயிகள் சார்ந்த திட்டங்களையும் மேம்படுத்த வேண்டும் என, கர்நாடக மாநில விவசாயிகள், தலைநகர் பெங்களூரில் குவிந்து, கோரிக்கை மனுவை அரசிடம் அளித்தனர். குறைந்தபட்ச சம்பளமும் உயர்த்தப்பட வேண்டும் என அவர்கள் கூறினர்.
வேலை உறுதியளிப்புத்திட்டத்தில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் சம்பளப் பாக்கி உள்ளது என போராட் டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குற்றம் சாட்டினர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தலைமையில் நடந்த போராட்டத்தின் முடிவில் தரப்பட்ட மனுவில், அருகாமை மாநிலமான தமிழ்நாடு, கேரளாவில் தரப்படும் சம்பளத்திற்கு இணையான சம்பளம் தர வேண்டும். அரு காமை மாநிலங்களில் வேளாண் தொழிலாளர்களுக்கு பி.எப்., முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதைப் போல தங்களுக்கும் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: