லாரி கவிழ்ந்து வியாபாரி பலி
சென்னை, பிப். 28-கோயம்பேட்டில் இருந்து பல்லாவரத்துக்கு காய்கறி ஏற்றிக்கொண்டு மினி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஓட்டு நர் முருகன் வேனை ஓட்டிச் சென்றார். அதிகாலை 5.30 மணி அளவில் அந்த வேன் பரங்கிமலை ஜி.எஸ்.டி. ரோட் டில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல ஓட்டுநர் முருகன் முயன்றார். அப்போது எதிர்பாராத வித மாக சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது.இந்த விபத்தில் வேன் டிரைவர் முருகன், காய்கறி லோடு மேல் அமர்ந்து பய ணம் செய்த வியாபாரிகள் தனசேகரன் (24), நந்தகுமார் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் தனசேக ரன் பரிதாபமாக இறந்தார்.இவர் ஜமீன் பல்லாவரத் தைச் சேர்ந்தவர். விபத்து குறித்து பரங்கிமலை போக்கு வரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
————————-
மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர், பிப். 28-மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81.39 அடியாக குறைந்துள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதி யில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. செவ் வாயன்று (பிப். 28) நிலவரப் படி விநா டிக்கு 607 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81.51 அடி, அணையின் நீர் இருப்பு 43.35 டி.எம்.சியாக இருந்தது.

Leave A Reply

%d bloggers like this: