சென்னை, பிப். 28-ரேசன் அட்டை புதுப் பிப்பதற்கான காலக்கெடு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை ஓராண்டிற்கு நீட் டிக்க தமிழக அரசு உத்தர விட்டது. அதன்படி புழக்கத் தில் உள்ள குடும்ப அட்டை களில் வருடம் குறிப்பிடா மல் உள்ள கூடுதல் தாளின் மேற் பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்க தாக அறிவிக்கப்பட்டது. புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 28.02.2012 வரை அளிக்கப்பட்டது 1 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரத்து 682 குடும்ப அட்டைகளில் இதுவரை 1 கோடியே 86 லட்சத்து 58 ஆயிரத்து 768 குடும்ப அட்டைகள் நியாய விலைக் கடைகளில் புதுப் பிக்கப்பட்டுள்ளன. மேலும் கால நீட்டிப்பு வேண்டு மென்று கேட்டு, பொது மக்களிடமிருந்து கோரிக் கைகள் வந்துள்ளன. இதனை பரிசீலித்த முதலமைச்சர் ஜெயலலிதா, மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது 31.03.2012 வரை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது. இதன் படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் குடும்ப அட்டை வைத் திருப்போர் மற்றும் அரிசி, சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரண மாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக நியாய விலைக் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டை தாரர்கள், புனிதப் பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளி ருப்பு விரதம் மேற்கொண் டுள்ளோர் மற்றும் புதுப்பித் தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில், அவர்களது குடும்ப அட்டை களை ஆன்-லைன் முறை யில் புதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.அதன்படி hவவயீ://210. 212.62.90:8080/நேறக உயீஉயசனஎயடனைவைல. னடி என்ற இணைய தள முகவரிக்கு சென்று புதுப்பித்துக் கொள் ளலாம். இதில் ரேசன் பொ ருள் வேண்டுவோர் 2012 ஆண்டுக்கான கால நீட்டி ப்பு தாளின் இரண்டு நகல் களை எடுத்துக் கொண்டு ஒரு நகலை குடும்ப அட் டையில் ஒட்டிக் கொண் டும், மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேசன் பொருட்களை தொ டர்ந்து பெற்றுக் கொள் ளலாம்.ரேசன் பொருள் வேண் டாதோர் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத் துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போது மானது. இணையதள வசதி 01.03. 2012 முதல் 31.03.2012 வரை யில் நடைமுறையில் இருக் கும். இந்த வசதியை பொது மக்கள் பயன்படுத்திக் கொள் ளுமாறு உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.இவ்வாறு அரசு வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: