இராமநாதபுரம், பிப். 28-இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப் பட்ட ஜெகதாபட்டினம் மீனவர்களை அடித்துச் சித்ரவதை செய்து, மீன் களை தின்னச் சொல்லி கடற் படையினர் அட்டூழி யம் செய்ததாக கரை திரும் பிய மீனவர்கள் கண்ணீரு டன் கூறினர்.புதுக்கோட்டை மாவட் டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 11ம்தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந் திய கடற்பகுதியில் மீன் பிடித் துக்கொண்டிருக் கும் போது அங்கு வந்த இலங்கை கடற் படையி னர் ஒரு படகை பிடித்த னர். அதில் இருந்த மீன வர்கள் சேகர், முத்து மணி, ஆரோக்கியம் ஆகிய மூன்று பேரிடமும் விசா ரணை செய்தனர். தமிழகப் படகுக்கு மேல் நேவி என எழுதப்பட்டிருந்துள்ளது. இதுகுறித்து இலங்கை கடற்படையினர் மீனவர் களிடம் விசாரணை செய் துள்ளனர். அப் போது கடந்த 2007 முதல் 2008 வரையில் இந்திய கடற் படையினருக்கு வாட கைக்கு விடப்பட்டிருந் துள்ளது என தமிழக மீன வர்கள் தெரிவித்துள் ளனர். ஆனால் இலங்கை கடற் படையினர் அந்த மூன்று மீனவர்களையும் கடுமை யாகத்தாக்கியதுடன், பட கில் இருந்த மீன்களை தின்னச்சொல்லி சித்ரவதை செய்துள்ளனர். மேலும் படகில் இருந்த தொழில் நுட்பக் கருவிகளைக் கேட்டு மிரட் டியது டன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இதில் மூன்று மீனவர் கள் படுகாயமடைந் தனர்.இதனைத்தொடர்ந்து மூன்று மீனவர்களை சிகிச் சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முறை யான சிகிச்சையும் அளிக்க வில்லை. இதன் பின் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட மீனவர்களை நீதி பதி விசாரணையில், மீன் பிடிக்கவந்ததை உறுதி செய்து மூன்று பேரையும் படகுடன் விடுதலை செய் தனர். இதன்பின் இலங்கை யில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் மீனவர்கள் ஒப்படைக் கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து திங்களன்று அதிகாலை யில் இலங்கை கடற்படை யினரால் படகுடன் மூன்று மீன வர்களும் இந்திய கடலோரக் காவல்படையி னரிடம் ஒப்படைக்கப்பட் டனர். அவர்களை மதியம் 1 மணிக்கு மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல்படையினர் துறை முகத்திற்கு கொண்டு வந்த னர். அவர்களை விசார ணைக்குப் பின் உறவினர் களிடம் ஒப்படைத்தனர். இலங்கை கடற்படையி னர் நடத்திய தாக்குதல் சம்பவங்களை அவர்கள் செய்தியாளர்களிடம் கண் ணீருடன் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: