இந்தியா சுதந்திரத்திற்கு பின்னர் மின்வாரியம் பொதுத்துறையாக இருந்து சாதித்த சாதனைகள் ஏராளம். மின்சார உற்பத்தியில், விநியோகத்தில், மின் சாரத்தை கொண்டு செல்லும் கட்ட மைப்பில் இந்திய மக்களின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யும் நிலையிலேயே இருந்தது. தன்னிறைவோடு செயல்பட்ட மின்சாரத்துறை புதிய பொருளாதார கொள்கை அமலாக்கத்தின் மூலம் பல பின்னடைவுகளை சந்திக்க நேர்ந் துள்ளது.1991ல் புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் துவங்கியபோது, அது மின்சாரத் துறையையும் விட்டு வைக்கவில்லை. மின்சாரத் துறையில் புதிய பொருளாதாரக் கொள்கையை அம லாக்கி தனியாரை உலவ விடுகின்ற வகையில் ஏற்கனவே உள்ள சட்டங் களை மாற்றி அமைக்கின்ற விதமாகத் தான் மின்சார மசோதா -2000-ஐ சட் டமாக்க முயற்சி செய்தார்கள்.இந்த மின்சார மசோதா சட்டமாவ தற்கு முன்பாகவே ஒரிசா மாநில அரசு மின்சாரத் துறையில் சீரமைப்பதற் குண் டான நடவடிக்கையில் வேகமாக ஈடு பட்டு மின்சாரத் துறையை உற்பத்தி, விநி யோகம், டிரான்ஸ்மிஷன் என கழகங் களாக பிரித்து, மின்சார விநியோகம் உட் பட பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளித்து அழகு பார்த்த அரசாக நவீன் பட்நாயக் அரசு விளங்கியது.2000 வது ஆண்டு கடும் புயல் ஒரிசா மாநிலத்தை தாக்கி நிலைகுலையச் செய்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். விவசாயம் பாதிக் கப்பட்டது. 400க்கும் மேற்பட்ட கிராமங் களில் மின்சார தளவாடங்கள் மண் ணோடு மண்ணாக சாய்ந்தன. இந்த 400 கிராமங்களிலும் மின்சார இணைப்பு அடியோடு துண்டிக்கப்பட்டது. 400 கிராமங்களும் இருளில் மூழ்கின. புயலின் சீற்றம் ஓய்ந்த பிறகு மின் விநியோகத்தில் ஈடுபட்ட எ.இ.எஸ். என்ற அமெரிக்க நிறு வனம் இருளில் மூழ்கியுள்ள கிராமங் களுக்கு மின்சாரத்தை வழங்க முன்வர வில்லை. அரசு தலையிட்டபோது, மின் இணைப்பை இழந்த கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டுமானால் 60 மில்லியன் டாலர், 300 கோடி ரூபாயை இழப்பீடு தொகையாக அளித்தால்தான் மின்இணைப்பை வழங்க முடியும் என்ற நிபந்தனையை விதித்து பல மாதங்கள், பல வருடங்கள் புயலால் பாதிக்கப்பட்ட அக்கிராம மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர். சில வருடங்களுக்கு பின்னர் ஒரிசா அரசே முன்வந்து பல கோடி ரூபாயை செலவு செய்து இருளில் மூழ்கிய மக்களுக்கு மின்சாரம் வழங் கியது. இதுதான் மின் விநியோகத்தில் தனியாரின் லட்சணம் என்பது தெள்ளென தெரிந்தது.2004 ல் தமிழகத்தில் கடும் புயல் வீசி யது. அப்போது பாதிப்புக்குள்ளான கட லூர், நாகப்பட்டினம் ஆகிய இரு மாவட் டங்களும் பல்வேறு இழப்புகளுக்கு உள் ளாயிற்று. மின்சார கம்பங்கள், மின் மாற்றி கள் ஆயிரக்கணக்கில் தரையில் சாய்ந் தன. பொதுத்துறையாக இருந்த தமிழ் நாடு மின்வாரியமும், மின்வாரிய ஊழி யர்களும் புயலடித்து ஓய்ந்த மறு தினமே 400க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலா ளர்கள் இதர மாவட்டங்களில் இருந்து வர வழைக்கப்பட்டு உடனடியாக பழுது சரி பார்க்கப்பட்டு, தரையில் விழுந்த கம்பங் களும், மின் மாற்றிகளும் சரிசெய்யப்பட்டு மின்இணைப்பு வழங்கப்பட்டது. விநியோ கம் தனியார்மயமான ஒரிசா மாநிலத்தில் இழந்த மின்சாரத்தை பெற அக்கிராம மக் கள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை. ஆனால் மின்சாரத் துறை பொதுத் துறையாக செயல்பட்ட தமிழகத்தில் புயல் பாதிப்பால் இருள் சூழ்ந்த கிராமங் கள் மறு தினமே மின்சாரத்தை திரும்பப் பெற்றது தான் வரலாறு.காலங்கள் நகர்ந்து கொண்டே உள்ள நிலையில் மின்சார மசோதா, 2003ம் ஆண்டில் மின்சாரம் சட்டம் ஆக்கப் பட்டு அந்த சட்டத்தை மத்திய அரசு நிர்ப் பந்தித்து பல மாநிலங்களில் அமல் படுத்த செய்தது. அதன் ஒரு அம்சமாகத் தான் மராட்டிய மாநிலத்தில் என்ரான் என்ற பகாசுர பன்னாட்டு நிறுவனத்தை மின் உற்பத்தியில் ஈடுபடுத்தி, தோல் வியை கண்டதோடு பல்லாயிரக்கணக் கான கோடி ரூபாய் மராட்டிய மாநில மின் வாரியத்திற்கு இழப்பும், என்ரான் என்ற பன்னாட்டு நிறுவனம் கொள்ளையடிக் கும் நிகழ்ச்சியும் நடந்தது.மராட்டிய மாநிலம் மின் உற்பத்தியில் தனியாரை ஈடுபடுத்தியதோடு மட்டும் நிற்காமல் மின்சார விநியோகத்திலும் உள்நாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்த்தது. இந்தியாவின் பெரும் வர்த்தக நகரமான மும்பை நகர மின் விநியோகத் தையே டாடாவுக்கும், ரிலையன்ஸ்க்கும் தாரை வார்த்தது. 2005 ம் ஆண்டு மராட் டிய மாநிலத்தில் பெரும் மழையின் காரண மாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மும்பை நகரமே தண்ணீரில் மூழ்கியது. பல நூறு மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்) தண்ணீரில் மூழ்கியது. பூமிக்கு அடியில் செல்லும் கேபிள்களும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டு மும்பை நகரம் இரு ளில் மூழ்கியது. மழையின் தாக்கமும், வெள்ள நீர் வடிந்த பின்பு டாடா, ரிலை யன்ஸ் நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களை கொண்டு பழுதுகளை சரி செய்து மின் இணைப்பு வழங்க முடிய வில்லை. மும்பையில் இருளில் மூழ்கிய மக்கள் மின்சாரம் வேண்டி போராடிய பின் னர் பொதுத்துறை நிறுவனமான மராட்டிய மின்வாரியம் ஈடுபட்டு நிதி உதவி உள் ளிட்ட உதவிகளை செய்து, மராட்டிய மின்வாரிய ஊழியர்களை பணியில் ஈடு படுத்தி சில தினங்களிலேயே மும்பை நகர மக்களுக்கு மின்னொளி வழங்கியது. மராட்டிய மாநில மின்வாரியமும், அங்கு பணியாற்றிய மின்சார தொழிலாளர் களுமே ஆவர்.ஆந்திர மாநிலத்திலும் 2005ம் ஆண் டுக்கு பின்னர் கடும் புயல் வீசியது. பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக் கான மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். மின்சார வாரியமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியது. ஆயிரக்கணக் கான மின் கம்பங்கள், நூற்றுக்கணக்கான மின்மாற்றிகள் இருக்கும் இடம் தெரியா மல் இழப்புக்குள்ளாகியது. ஆந்திர மாநில மின்வாரிய ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மண்மூடிட்ட இடங்களில் கம்பங்களை நடுவதற்கு தோண்டுகின்ற போது பிணக்குவியல்களே காட்சியளித் தன. அந்த நிவாரணப் பணியில் அண்டை மாநிலமான தமிழக மின்வாரிய ஊழியர் கள் அதிலும் குறிப்பாக சென்னை, செங்கை, காஞ்சி, வேலூர் போன்ற மாவட் டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான நிரந்தர ஊழியர்களும் ஒப்பந்தத் தொழி லாளர்களும் அழுகிய பிணக்குவியலுக் கிடையில் முகாம் அமைத்து அங்கேயே உணவு அருந்தி, இரவு, பகல் பார்க்காமல் பணியாற்றினர். இருளில் சூழ்ந்த கிராமங் களுக்கு சில நாட்களிலேயே மின்னொளி வழங்கியது, ஆந்திர, தமிழக பொதுத்துறை மின்வாரிய ஊழியர்களே என்பது இன் னும் நமது நெஞ்சினில் நீங்கா இடம்பெற்ற நிகழ்வாக அமைந்துள்ளது.இந்நிகழ்வுகளுக்கெல்லாம் முத்தாய்ப் பாகத்தான் 30.12.2011 அன்று தமிழகத்தை குறிப்பாக கடலூர், விழுப்புரம், நாகப்பட் டினம் மாவட்டங்களை தாக்கியது ‘தானே’ புயல். இப்புயலின் தாக்குதலால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மக் களின் அன்றாட வாழ்க்கையை புரட்டிப் போட்டது. பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். வீசிய தானே புயல் இரு மாவட்ட விளை நிலங்களை துவம் சம் செய்தது. இரு மாவட்டங்களிலும் மின்சார கட்டமைப்பு முழுவதுமாக சீர ழிந்தது. 60,000க்கும் மேற்பட்ட மின் கம் பங்களும், 5000 க்கும் மேற்பட்ட மின் மாற்றிகளும் தனது உருவத்தை முழு வதும் இழந்து நின்றது. பல கிராமங்களும் இருளில் மூழ்கின. இருளில் மூழ்கிய கிராமங்களுக்கு மின்சாரத்தை வழங்கும் சவாலை பொதுத்துறை நிறுவனமான தமிழக மின் வாரிய ஊழியர்கள் ஏற்றனர்.பல்லாயிரக்கணக்கான களப்பிரிவு ஊழியர்கள், மஸ்தூர்கள், ஒப்பந்தத் தொழி லாளர்கள், பொறியாளர்கள், அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கடலூரில் திரண்டனர். ஏற்பட்ட இழப்பை தன் வீட்டில் ஏற்பட்ட இழப்பாக கருதி, போர்க்கால அடிப்படையில் பணி யில் ஈடுபட்டு/ பல மாதங்கள் செய்ய வேண்டி பணியை பல நாட்களிலேயே செய்து பழுதுகள் சரி செய்யப்பட்டு, மின் னொளி வழங்கி வரலாறு படைத்தனர். தமிழக மக்களும், மின்வாரிய அதிகாரி களும் ஏன் தமிழக முதலமைச்சரும், தமிழக மின் வாரிய ஊழியர்களை பாராட் டாமல் இருக்க முடியாது என்ற நிலையை உருவாக்கி வரலாறு படைத்துள்ளனர்.வரலாறு கற்பிக்கும் பாடம், மின் வாரி யத்தில் சாதனைகளை செய்ய முடியும் என்றால் அது பொதுத்துறை நிறுவன ஊழியர்களால் மட்டுமே முடியும் என்பது தான் நிரூபணமாகியுள்ளது. ஆளுகின்ற அரசுகள் இதை உணருமா! தனது கொள்கையில் மாற்றத்தை உருவாக்குமா என்பதற்கு காலம்தான் பதில் கூறும்.

Leave A Reply

%d bloggers like this: