மே.பாளையம், பிப். 28- தொடர் மின்வெட்டைக் கண்டித்து மேட் டுப்பாளையம் மின்அலுவலகத்தை முற்றுகை யிட்டு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத் தினார்கள்.விவசாயத்தையே முக்கிய வாழ்வாதாரமாக கொண்டுள்ள மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் பகுதிக ளில் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு தொடர்ந்து அமலில் உள்ளது. விவசாயத்துக்கு 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங் கப்படுவதால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள் ளது. இதனால் தொடர் மின்வெட்டை கண்டித் தும், நிலைமையை சமாளிக்க உடனே கூடங் குளம் அணு மின் நிலையத்தை உடனே திறக்கக் கோரியும் மேட்டுப்பாளையம் தாயனூர் என்ற இடத்தில் விவசாயிகள் நேற்று (28-ந்தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழக விவசாயிகள் சங்க தலை வர் டாக்டர் சிவசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மின் வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கோரியும், மின் சார ஒழுங்கு முறை ஆணையம் வேண்டாம் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதன் பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக முழக்க மிட்டவாறு சென்ற விவ சாயிகள் தமிழ்நாடு மின் வாரியத்தின் இளம் மின் பொறியாளர் அலுவல கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி னார்கள். பின்னர் அவர்கள் மின் வாரிய அலுவ லகத்தில் கோரிக்கை மனுவை யும் கொடுத்தார்கள். இது பற்றி தமிழக விவசாயி கள் சங்கத் தலைவர் சிவசாமி கூறியதாவது:-கருகும் பயிர்களை காப்பாற்ற விவசாயிகளுக்கு கூடுதல் நேரம் மின்சாரம் வழங்க வேண்டும். கடும் மின்பற்றாக்குறையை சமாளிக்க கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே செயல்படுத்த வேண்டும். மத்திய அரசின் தண்ணீர் கொள்கையை தமிழகத்தில் உள்ள எந்த விவசாயியும் ஏற்றுக் கொள்ள மாட்டான். தனியாரிடம் தண்ணீரை தாரை வார்க்கும் இத்திட்டத்தை எதிர்த்து மிக கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும் என் றார்.

Leave A Reply

%d bloggers like this: