கொச்சி, பிப். 28-
கேரள மாநில அரசின் கயிறு மேம்பாடு இயக்கு நரகம் எர்ணாகுளத்தில் மாதிரி கயிறு கிராமத்தை அமைக்கத் திட்டமிட்டுள் ளது. கயிறு தொழிற்சாலை மற்றும் சுற்றுலாவுடன் இந்தத் திட்டத்தை இணைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பளுருத்தியில், 5 ஏக்கர் பரப்பளவில் மாதிரி கயிறு கிராமம் அமைகிறது. கயிறு தொழிற்சாலையில் மேற் கொள்ளப்படும் பல்வேறு செயல்பாடுகளை விளக்குவ தற்கு இந்தக்கிராமம் உதவும். பல்வேறு தயாரிப்பு கள், விற்பனைக்காக காட் சிக்கு வைக்கப்படும்.
இயற்கை எழிலுடன் கூடிய மக்கள் ரசிக்கும் வெம்பனாடு ஏரிக்கரைப் பகுதியில் நீர்ப்போக்குவ ரத்து வசதிகளுடன் கூடிய இடத்தில் கயிறு கிராமம் அமைகிறது. சுற்றுலாப் பயணிகள், பின்னேற்ற நீரில் பயணம் அளிப்பதற்கான வாய்ப்புகளையும் கிராமம் அளிக்கிறது.
கயிறு வாரியம் தனது சந்தையை விரிவுபடுத்த புது மையான ஆலோசனை களை அளிக்கிறது. மண் அரிப்பை தடுக்க உதவும் பொருள் மற்றும் பயிரிட லுக்கு வழிகாட்டியாக கயிறு வாரிய உற்பத்திப்பொருள் பூவத்ஸ்ரா உள்ளது. வெளி நாட்டிலும் இந்த உற்பத்திப் பொருள் பரவலாக பயன் படுத்தப்படுகிறது. சாலை செப்பனிடும் பணிகளுக்கும் இதனை பயன்படுத்த ஆலோ சனை தரப்பட்டுள்ளது.
2010-11ம் ஆண்டு கால கட்டத்தில் கேரள கயிறு வாரிய ஏற்றுமதி ரூ.800 கோடியை கடந்துள்ளது. பிராந்திய சந்தைகளை விரிவுபடுத்தி, ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: